அரசின் ஐஎன்வி ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரம் தர முடியாது! - கோவாக்சின் பரிதாபம்

 

 

 



 


ஐஎன்வி ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரம் தர முடியாது! - கோவாக்சின் பரிதாபம்

கொரோனா வந்த இரு ஆண்டுகளில் பெரிய லாபம் பார்த்தது பாரத் பயோடெக் என்ற இந்திய மருந்து நிறுவனம், மக்களின் உயிர்பயத்தை பயன்படுத்தி நிறைய லாபம் சம்பாதித்தது. இதற்கு ஆளும் வலதுசாரி மதவாத கட்சியின் ஆசிர்வாதம் இருந்தது. உள்நாட்டில் அடித்துப் பிடுங்கி காசு சம்பாதித்தாலும் தடுப்பூசியை உலகளவிலான மருத்துவ அமைப்புகள், அங்கீகரிக்க மறுத்துவிட்டன. ஆனால், இந்திய அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு பத்ம பூஷன் விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியது. உண்மையில், நாட்டின் மதிப்பிற்குரிய விருது, அரசியல் காரணங்களுக்காக தனது மதிப்பை இழந்து டிவி சேனல்கள் நடிகர்களுக்கு கொடுக்கும் தாம்பூலப்பை போல மாறியிருக்கிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், நேஷனல் இன்ஸ்டிடியூட் வைரலாஜி(என்ஐவி) என்ற எழுபத்தி இரண்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அரசு நிறுவனம் ஒப்பந்தம்போட்டு, இணைந்து கோவாக்சினை உருவாக்கின. ஆனால் மருந்து விற்பனைக்கு வந்தபோது என்ஐவிக்கான எந்த அங்கீகாரமோ, அடிக்குறிப்போ கூட இல்லை. வலதுசாரி மதவாத அரசுக்கு வாழ்நாள் பெருமையாக கோவாக்சின் அமைந்தது என விளம்பரப்படுத்தினர். கைக்கூலி ஊடகங்கள் அதை எப்போதும் போல ஒத்து ஊதின. கண்டுபிடிப்புக்கு உதவியதால் ராயல்டி தொகையாக இந்திய அரசுக்கு, பாரத் பயோடெக் நிறுவனம் 172 கோடி ரூபாய் கொடுத்ததாக துறை சார்ந்த அமைச்சர் செய்தி வெளியிட்டார்.

நாட்டின் ஆட்சித்தலைவர் அனைத்தையும் தனியாகவே தீர்மானித்து செயல்படுத்துவதால், மேற்படி செய்திகளில் வேறு எந்த தகவல்களும் தெரியவில்லை. என்ஐவி நிறுவனத்திற்கும், பாரத் பயோடெக்கிற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தமே புதிராக உள்ளது. அதை அவர்கள் வெளிப்படையாக மக்களுக்கு வெளியிடவும் இல்லை. உண்மையில் தடுப்பூசி உருவாக்கத்தில் என்ஐவி நிறுவனத்தின் மூன்று ஆராய்ச்சியாளர்கள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி காப்புரிமையில் எந்த பங்கும் இல்லை. குறைந்தபட்ச நன்றி கூற மனது இல்லை. பாரத் பயோடெக் நிறுவனம், யாருக்கும் எந்தவித கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் அளிக்கக்கூடாது என தீர்மானம் எடுத்துள்ளது. இதை எதிர்த்து ஐசிஎம்ஆர் கூட வழக்கு தொடுக்கவில்லை. இந்த துரோகத்திற்கு பரிசாக பத்ம பூஷன் விருது வேறு வழங்கப்பட்டிருக்கிறது.

அரசு அமைப்புகள் முழுக்க மூடபக்தி கொண்ட ஆர்எஸ்எஸ் என்று இந்து தீவிரவாத ஆட்கள் கபளீகரம் செய்து நிரம்பிவிட்டதால் நீங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவாக பேசினாலும் உடனே பாக்.கின் ஐஎஸ்ஏ அல்லது அமெரிக்காவின் சிஐஏ ஆதரவு ஆட்கள் என முத்திரை குத்த இணைய கேலி வதைக்குழுக்கள் தயாராக உள்ளன.

அரசுக்குத்தான் பாரத் பயோடெக் நிறுவனம் 172 கோடி ரூபாய் அளித்துள்ளதே என கேட்கலாம். அதன் வருமானத்தைப் பார்த்தால் கொடுத்த ராயல்டி பணம் எந்த மூலைக்கு என்று கேட்கத் தோன்றும். 2021ஆம் ஆண்டு, 1,501.2 கோடி சம்பாதனை என்றால், 2022ஆம் ஆண்டு 8,148.1 கோடியாக வருமானம் உயர்ந்துவிட்டது. உள்நாட்டில் அந்தளவு கோவாக்சின் தேவை இருந்திருக்கிறது. இனாம் வாங்கும் ஆளும் அரசின் ஆசிர்வாதம் வேறு இருக்க பிரச்னை என்ன?

அமெரிக்காவில் இதேபோல கதை நடந்தேறியது. அங்கு மாடர்னா நிறுவனத்துடன் அரசின், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அமைப்பு இணைந்து எம்ஆர்என்ஏ தடுப்பூசியை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது. விற்பனை என வரும்போது, தனியார் நிறுவனம், என்ஐஹெச் நிறுவனத்தை கண்டுகொள்ளாமல் லாபம் பார்க்க நினைத்தது. ஆனால் அதை அமெரிக்க அரசு அனுமதிக்கவில்லை. இதனால் ராயல்டி தொகையாக, 400 மில்லியன் டாலர்களைக் கொடுக்க நேரிட்டது.

என்ஐஹெச் தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், அதை சந்தைக்கு கொண்டுவருவதற்கான நிதியையும் அளித்தே இந்த நிலைமை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஐந்து ஆண்டுகள் உழைத்தும் கூட அரசு நிறுவனத்திற்கு அங்கீகாரமும் காப்புரிமையும் கொடுக்காமல் மாடர்னா ஏமாற நினைத்தது. இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் போல முதுகெலும்பு இல்லாமல், என்ஐஹெச் நடந்துகொள்ளவில்லை. உறுதியாக நின்று அறிவுசார் காப்புரிமை, நிறுவனத்தின் பெருமைக்காக போராடி வென்றது. மாடர்னா நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், என்ஐஹெச்சின் மூன்று அறிவியலாளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவது, ராயல்டி தொகை உறுதி செய்யப்பட்டது. இதுபோல நேர்மையான நடவடிக்கைகளை இந்திய அரசு செய்ய யோசிக்குமா என்று கூட தெரியவில்லை. அந்தளவு இந்துத்துவ பார்ப்பன கும்பல்களின் ஊடுருவலால், அனைத்து அரசு அமைப்புகளும் களங்கப்பட்டு போய்விட்டன.

இன்னொரு விஷயமாக மாடர்னா, பயோஎன்டி, பைசர் தயாரித்த தடுப்பூசி மருந்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், என்ஐஹெச்சிற்கு சொந்தமானது. அதற்கான தொகையை பயோஎன்டி நிறுவனம் தர மறுத்துவிட்டது. அதற்கான சட்டரீதியான போராட்டம் நடந்து வருகிறது. மாடர்னா நிறுவனம், 2022ஆம் ஆண்டு சம்பாதித்த தொகை 8.3 பில்லியன் டாலர்கள். எனவே பணத்தை கொடுப்பதில் எந்த பிரச்னையுமில்லை. கொடுக்க கூடாது என்ற சுயநலமான மனம்தான் பிரச்னை.

இந்திய அரசைப் பொறுத்தவரை, ஆட்சித்தலைவர் சில பணக்காரர்களுக்கு ஆதரவாக அவர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் ஆட்சியே நடத்துகிறார் என்பது புதிய செய்தியல்ல. இனாம் வாங்கித்தான் மதவாத கட்சியின் அதன் தாயான இந்துத்துவ தீவிரவாத அமைப்பும் இயங்கி வருகின்றன. எனவே, அவர்களுக்கு காசு கொடுக்கும் முதலாளிக்கு வாலாட்டியபடி ஆதரவாக இருப்பார்கள். இதில் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறி கூப்பாடு போட்டாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

கோவாக்சினை உலகம் முழுக்க விற்க பாரத் பயோடெக் நிறுவனம் ஆசைப்பட்டது. இதற்காக வேர்ல்ட் இன்டலெக்சுவல் பிராப்பர்டி ஆர்கனிசேஷனை அணுகியது. ஆனால் காப்புரிமைக்கான வேண்டுகோளை அந்த நிறுவனம் முற்றாக நிராகரித்துவிட்டது. நாங்கள் நம்பிக்கையை பேணுகிறோம்... என்ற மஹ்மூத் தார்விஷின் கவிதை வரி நினைவுக்கு வருகிறது. பரிதாபமான காட்சி.....

 லதா ஜிஸ்னு
டவுன் டு எர்த் இதழ்

தமிழாக்க கட்டுரை

தீரன் சகாயமுத்து - பிரதர்ஹூட் சொசைட்டி

#latha jishnu #WIPO #IPO #patent #bharat biotech #inventiveness #padma bhushan #holy cow #krishna ella #suchitra #RSS #BJP #BioNTech #moderna #NIH #covaxin #mRNA #vaccines #IPRS #ICMR #Comirnaty #obfuscation #consealment #downtoearth #magazine #NIV #research

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்