இடுகைகள்

சோசலிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோசலிசத்திலிருந்து பாசிசம் பிறக்கிறதா? - விளக்குகிறார் எஃப்ஏ ஹயேக்

படம்
  ரோட் டு செஃர்ப்டம் நூல் அட்டை ரோட் டு செஃர்ப்டம் எஃப்ஏ ஹயேக்   இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல் தத்துவவியலாளர், ஹயேக். இவர் நூலில்   அரசியல்   தத்துவங்களை விரிவாக விளக்கி எழுதியுள்ளார். இந்த நூலை இடதுசாரி ஆதரவாளர்கள் படிக்கும்போது நிச்சயம் நெஞ்சுவலி வரும். அந்தளவு கம்யூனிசத்தை, இடதுகளுக்கான கருத்தை தாக்கியுள்ளார். நாம் கவனிக்க வேண்டியது வரலாற்று ஆதாரங்கள் மூலம் தனது கருத்தை எப்படி படிப்பவர்களிடம் கொண்டு செல்கிறார், ஏற்க வைக்கிறார் என்பதை மட்டுமே. 1941ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஆசிரியர். சோசலிசம் வழியாக பாசிசம், நாஜியிசம் உருவாகிறது என்பதை விளக்கி கூறுகிறார். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளே பெரும்பாலான கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எப்படி சட்டப்பூர்வமாக உருவாகிறது, மக்களை அதற்கு தயார்படுத்துகிறது, ஊடகங்களை அதற்கேற்ப வலதுசாரி அரசியல்வாதிகள் எப்படி வளைக்கிறார்கள் என்பதை நூலாசிரியர் நன்றாக விளக்கியுள்ளார். நூலை படிக்கும்போது ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி, ரஷ்யாவில் நடைபெற்ற லெனின், ஸ்டாலின் ஆட்சி ஆகியவை நினைவில் வந்த

நேருவின் சோசலிச கொள்கையும், சோவியத் யூனியனும்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நேருவும், அவரின் சோவியத் சோசலிச உறவும்.  இன்று இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிர்வாக திறனின்மைக்கு கூட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். அவர் அக்காலத்தில் கடைபிடித்த கலப்பு பொருளாதாரம், சோசலிச கொள்கைகள், பெரும் தொழிற்சாலைகள் ஆகியவை அனைத்தும் இன்றைய கால கண்ணோட்டத்துடன் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில் நேரு சோவியத்தின் சோசலிச கொள்கைகளை முழுமையாக அப்படியே அமல்படுத்தினாரா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம்.  சோவியத் யூனியன்தான் சோசலிச தலைமையகம். அங்கு 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி, அதற்குப் பிறகு அங்கிருந்து உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பல்வேறு நாடுகளில் புரட்சிக்கான காரணங்களை தேடக் காரணமாக அமைந்தன. சோசலிசம் என்பது நாடுகளுக்கு ஏற்றது போல பல்வேறு வடிவங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. உதாரணத்திற்கு சீனா. அங்கும் சோசலிச கொள்கைகள் உள்ளன. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு சர்வாதிகாரம் செய்து வருகிறது.  ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அவர் பெரிதாக முக்கியமாக நினைக்கவில்லை. 1926-27 காலகட்டத்