பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்













ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை.




ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார்.




1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடதுசாரி தத்துவம் என்பது அடித்தளமாக இருந்தது என புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.




2007ஆம் ஆண்டு ஜோயல் கோவெல், தி எனிமி ஆஃப் நேச்சர் என்ற நூலை எழுதி, அதில் முதலாளித்துவம் எப்படி சூழலை மாசுபடுத்துகிறது, அதைத்தடுக்க ஒரு இயக்கமாக மாறி போராடவேண்டிய தேவை பற்றி எழுதினார்.




ஆப்பிரிக்காவில் சூழலியல் எப்படி வளர்ந்தது என்பதைப் பற்றி பார்ப்போம். ஆப்பிரிக்க கண்டத்தில் மார்க்சியம், பெண்ணியம், காலனியத்திற்கு எதிர்ப்பு கருத்துகள் ஆகியவை மெல்ல தோன்றின. சூழல் சோசலிசத்தை முதலில் அறிமுகப்படுத்திய தலைவர் என்றால், தாமஸ் சங்கராவைக் கூறவேண்டும். தான் பேசிய கருத்துகளுக்காக உயிரையே பணயம் வைக்க வேண்டியதிருந்தது. 1987ஆம் ஆண்டு, சங்கரா தனது சூழல் கொள்கைகளை விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்களிடம் கொண்டு சென்றுவிட்டார்.


2008ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில், பசுமை சோசலிசவாதி கூட்டணி அரசமைக்க முயன்றது. ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது அதிக செலவு பிடிப்பதாக இருந்ததால் கட்சி போட்டியிடவில்லை. அன்றைய தென்னாப்பிரிக்காவில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் செயல்பட்டன. அதுதான் முக்கியமான தொழிலாக நடைபெற்றது. முதல் தரமான நிலக்கரி அயல் நாடுகளுக்கும், மலிவான தரம் கொண்ட நிலக்கரியை உள்நாட்டில் உள்ள மின்நிலையங்களில் பயன்படுத்தினர். தாராளவாத சந்தை, தனியார்மயத்திற்கு எதிரான இயக்கங்கள் தோன்றி போராடத் தொடங்கின. இயற்கை வளங்களை சுரண்டி வெளிநாடுகளுக்கு விற்றும் எதிர்பார்த்த செழிப்பு, மக்களுக்கு கிடைக்கவில்லை. பகிரப்படவில்லை என்று கூறலாம்.




சீனா ஒரு கட்சி ஆட்சி முறையைக் கொண்ட கம்யூனிச தத்துவ நாடு. ஆனால் காலப்போக்கில் முதலாளித்துவத்திற்காக நாட்டை திறந்து வைத்தது. அந்த நாட்டில் பான் யூ என்ற சூழலியவாதி, சூழல் பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். சூழல் சோசலிசம் பற்றி பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் கூட அதை அரசு தனது நிர்வாகத்தில் கொண்டுவரவில்லை. உலகில் அதிகளவு நிலக்கரியை, கச்சா எண்ணெய்யை பயன்படுத்துகிற, கார்பனை வெளியிடுகிற நாடு சீனா. இதனால் ஏற்பட்ட மாசுபாடு, கிராமம் தொடங்கி நகரம் வரை பரவியிருக்கிறது. பல்வேறு தொழிற்சாலைகளுக்கு எதிராக மக்கள் திரண்டு போராடி வருகிறார்கள். சீன அரசு, மக்களை கண்காணித்து சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தி ஆட்சி செய்துவருகிறது.




இந்தியாவில் சுரங்கம், கனிமம் எடுப்பது, மரங்களை வளர்ச்சியின் பெயரால் வெட்டுவது நடந்துகொண்டே இருக்கிறது. அணுக்க முதலாளித்துவத்தை இந்திய அரசு கையில் எடுத்திருப்பதால், சூழலியலாளர்களின் போராட்டம் பெரிதாக எடுபடுவதில்லை. போராட்டக்காரர்கள் தேச துரோகியாக சித்திரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணையின்றி பல்லாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சூழல் பெண்ணியம் பேசும் அருந்ததி ராய், வந்தனா சிவா ஆகியோர் முக்கியமான நூல்களை எழுதியுள்ளனர். கருத்துகளை ஊடகங்களில் பேசிவருகின்றனர். அருந்ததிராய் எழுதியுள்ள சிறிய விஷயங்களின் கடவுள் நாவலில், பழங்குடி மக்களின் பிரச்னைகள் பற்றி விவரித்துள்ளார். காந்தி வழியில் வந்த சூழல் பாதுகாப்பு அமைப்புகள் சில செயல்பட்டு வருகின்றன.




பெல்ஜியத்தில் உள்ள எஸ்ஏபி/எல்சிஆர் வலிமையான பசுமைக்கட்சியாக உள்ளது. இங்கிலாந்து, வேல்சில் பசுமைக் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. டச்ச பசுமைக்கட்சி, ஐரோப்பிய பசுமைக்கட்சிகளில் வலிமையான ஒன்று. ஸ்விட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளிலும் பசுமைக்கட்சிகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன.



Eco-socialism (also known as green socialism, socialist ecology, ecological materialism, or revolutionary ecology) is an ideology merging aspects of socialism with that of green politics, ecology and alter-globalization or anti-globalization. Eco-socialists generally believe that the expansion ... Wikipedia

கருத்துகள்