Rings of fire என்றால் என்ன? - தைவான் நிலநடுக்கம்!

 










தைவான் நிலநடுக்கம்



ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி, தைவானில் நடந்த நிலநடுக்கம் இருபத்தைந்து ஆண்டு வரலாற்றில் தீவிரமானது. அமெரிக்க வல்லுநர்கள் கணிப்பில் 7.4 ரிக்டர் அளவில் இருந்தது. இந்த இயற்கை பேரிடரில் எண்ணூறு பேர் காயமுற்றனர். ஒன்பது பேர் பலியானார்கள். 


நிலநடுக்கத்தின் தொடக்கம், தைவானின் கிழக்குப்பகுதி. அங்கே உள்ள ஹூவாலியன் கவுண்டி பகுதியில் உருவாகி வந்தது. இங்கு, பல்வேறு நிலநடுக்க அதிர்ச்சிகள் பதிவானது. அதில் ஒன்று, 6.5 ரிக்டர் அளவும் ஒன்று.


உலகிலுள்ள நாடுகளில் தொண்ணூறு சதவீத நிலநடுக்க பாதிப்பு நடக்கும் நாடு, தைவான். இப்படியான நிலநடுக்க சூழல் கொண்ட நாட்டை ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடுகிறார்கள். 1980ஆம் ஆண்டு தொடங்கி தைவானில் 4 ரிக்டர் அளவு அல்லது அதற்கு மேல் என நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.  எண்ணிக்கையில் இரண்டாயிரத்திற்கும் மேல் வருகிறது. நூறு நிலநடுக்கங்களின் ரிக்டர் அளவு 5.5 என அமெரிக்க நிலநடுக்க ஆய்வு அறிக்கை கூறுகிறது. 


பசிஃபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலை, நிலநடுக்கப்பகுதிகளை ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடுகிறார்கள். 40,240 கி.மீ. தொலைவில் அரைவட்ட அளவில் இப்பகுதி அமைந்துள்ளது. இந்த பரப்பில் ஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தியா, ஜூவான் டி ஃபூகா, கோகோஸ், கரீபியன், நாஸ்கா, அன்டார்டிக், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நிலத்தட்டுகள் உள்ளன என நேஷனல் ஜியோகிராபிக் அமைப்பின் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்கா, இந்தோனேஷியா, மெக்சிகோ, ஜப்பான், கனடா, குவாத்திமாலா, ரஷ்யா, சிலி, பெரு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இதில் உள்ளடங்கும். 


நிலத்தட்டுகள் ஒன்றையொன்று எதிர்த்து தள்ளிக்கொண்டு மோதிக்கொண்டு இருப்பதால், நிலநடுக்கம் ஏற்படுகிறது. இயற்கையாகவே தட்டுகள் நகர்வதால், நிலநடுக்கம் என்பது ஏற்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு கடல்தட்டும், ஐரோப்பிய தட்டும் மோதியதால் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஐஇ

The Ring of Fire (also known as the Pacific Ring of Fire, the Rim of Fire, the Girdle of Fire or the Circum-Pacific belt) is a tectonic belt of volcanoes and earthquakes. It is about 40,000 km (25,000 mi) long and up to about 500 km (310 mi) wide, and surrounds most of the Pacific Ocean. Wikipedia

கருத்துகள்