பசுமைக்கட்சியின் எழுச்சி










ஐரோப்பாவில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியில் வலுவான அரசியல்கட்சியாக பசுமைக்கட்சி உள்ளது. அறுபது எழுபதுகளில் மாணவர்கள் போராட்டம், அணுசக்தி போராட்டம் ஆகியவற்றின் அடையாளமாகவே பசுமைக்கட்சியின் எழுச்சி அமைந்தது.




வலதுசாரி கட்சிகளின் தாராளவாச, அணுக்க முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக, பாப்புலிச கொள்கைகளுக்கு எதிராக பசுமைக்கட்சி நிற்கிறது. இன்றுள்ள நிலையில் யாருமே சூழலைப் பற்றிய கவலையின்றி வாழ முடியாது. அரசியல்கட்சிகளும் அதை தங்களது தேர்தல் அறிக்கையில் புறக்கணிக்க முடியாது. அகிம்சை, சூழல் கவனம், பசுமைக் கொள்கைகள், தூய ஆற்றல் ஆகியவற்றை பசுமைக்கட்சி அடிப்படையாக கொண்டுள்ளது.




பசுமைக் கட்சி கூட்டமைப்பில் மொத்தம் எண்பது பசுமைக் கட்சிகள் இணைந்ததுள்ளன. இவற்றின் கொள்கைகள் குறிப்பிட்ட வரையறையில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. நிலப்பரப்பு சார்ந்து பல்வேறு கொள்கைகள், லட்சியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் அடிப்படையான கொள்கைகளைப் பார்ப்போம்.




சூழலைப் பாதிக்காதவாறு வாழ்க்கை




அடிப்படையான ஜனநாயகத்தன்மை




சமூக நீதி




அகிம்சை




ஆதரவு என்றால் எதிர்ப்பும் இருக்கத்தானே வேண்டும்? ஆயுத தொழில்துறை, அணு ஆயுதங்கள், உலக நாடுகளுக்கு இடையிலான வணிக ஒப்பந்தங்கள், நுகர்வு கலாசாரம் ஆகியவற்றை பசுமைக் கட்சி தீவிரமாக எதிர்க்கிறது. அடிப்படை மதவாத நாடுகளில் அதிகார மையப்படுத்தல் இருக்கும். ஆசியாவில் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை இதற்கு உதாரணங்களாக கூறலாம். இந்த நாடுகள் மெல்ல சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றன. உள்ளூர் நிர்வாக பிரச்னைகளுக்கு தேவையான முடிவுகளை அங்குள்ள மக்களின் பிரதிநிதிகளே எடுத்துக்கொள்ளலாம் என பசுமைக்கட்சி கூறுகிறது. அதிகாரம் ஒரே இடத்தில் குவிவதை எதிர்க்கிறது. பெண்களுக்கான வேலைவாய்ப்பு, இன, பொருளாதார சமநிலை, சமூகநீதிக்கான பொறுப்பு ஆகியவற்றை பசுமைக்கட்சி ஆதரிக்கிறது.




பசுமைக் கட்சியினர், சூழலைப் பேசும் முறையில் பொருளாதார இடதுசாரிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பசுமை மரபுவாதப் பார்வையில் சூழல் தேசப்பற்றாளர்களாக தம்மை பிரசாரம் செய்வதோடு, அதற்கேற்றபடி சந்தையிலும் தீர்வுகளை தேட முயல்கின்றனர் என செயல்பாட்டாளர் டெரக் வால் குறிப்பிடுகிறார். இவர், இங்கிலாந்தில் உள்ள பசுமைக்கட்சி உறுப்பினர் ஆவார்.




காலத்திற்கேற்பன நவீன மாற்றங்களுக்கு கட்சிகள் உள்ளாகவில்லை என்றால் அவை விரைவில் காலாவதி ஆகிவிடும். தற்போதைய நிலையில் பல்வேறு மேற்கு நாடுகளில் மரபான அரசியல்கட்சிகள், புதிய தலைமுறையினருக்கு அந்நியமாக மாறத் தொடங்கியுள்ளன. மதச்சார்பற்ற நாடுகளில் சாதி, மத, பிரிவினைகள் தொடங்கி சர்வாதிகாரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.




ஒருமுறைக்கு மேல் பிரதமராக, அதிபராக உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மெல்ல தங்களுக்கு ஏற்ப அரசியலமைப்புகளை மாற்றியமைக்கத் தொடங்குகிறார்கள். அமைச்சரவையில் மாற்றுக்கருத்துகளைக் கொண்டவர்களை கூலிப்படை வைத்து கொல்கிறார்கள். வேறுவகையில், அவர்களை முடக்கி வைக்கிறார்கள். வேறு யார் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க முடியும்? ஊடகங்கள்தானே? அதை முடக்க வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, உளவுத்துறை ஆகிய அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஊடகங்கள் காசு வாங்கிக்கொண்டு அரசின் ஊதுகுழலாக மாறுகின்றன. இதையும் மீறி சுதந்திரமாக செயல்படும் பத்திரிகையாளர்களை அரசியல் கட்சிகளின் குண்டர்கள் படுகொலை செய்கிறார்கள். ஒடுக்குமுறை சட்டங்கள் மூலம் சிறையில் அடைக்கிறார்கள். ஒரு காலத்தில் ஜனநாயக அமைப்புகளாக இருந்த நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற சுயாட்சி அமைப்புகளை களங்கப்படுத்துகிறார்கள். எளிய மக்களுக்கு நமக்கு எங்குமே நீதி கிடைக்காது என அவநம்பிக்கை ஏற்படவேண்டும் என நினைக்கிறார்கள். எனவே, பள்ளிகளை கட்டாமல் கோவில்களை கட்டுகிறார்கள். அங்கு வந்து தனக்கு நேர்ந்த அநீதிகளுக்கு முன்ஜென்ம வினைகளே காரணம் என மக்கள் அழுகவேண்டும் என கனவு காண்கிறார்கள்.




இதுபோன்ற சூழலில் பசுமைக் கட்சியினர், மரபான அரசியல் கட்சியினருக்கு மாற்றாக உள்ளனர். வென்ற இடங்களில் இடது, வலது என இரு பிரிவு கட்சிகளிடமும் கூட்டணி வைத்துக்கொண்டு தங்களது இலக்குகளை பிரசாரம் செய்து வுருகிறார்கள். கொள்கைகள நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.




The Latvian Green Party (Latvian: Latvijas Zaļā partija, LZP) is a green political party in Latvia. It was founded in 1990. It was a member of the European Green Party from 2003 until its expulsion in 2019. It is positioned in the centre and leans towards the centre-right on the political ... Wikipedia






கருத்துகள்