காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு

 











காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு



ஐரோப்பிய நாட்டினர், அமேசான் காட்டுக்குள் நுழைந்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்கம், மற்றொன்று அதிகாரம். வெளியே இருந்து வந்த அந்நியர்கள், காட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு நோய்களைக் கொண்டு வந்தனர். அதையும் தாங்கி நின்று எதிர்த்தவர்களை நவீன ஆயுதங்களால் படுகொலை செய்தனர்.  இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் அனைத்து புனைகதைகளிலும் காடுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. அவர்களைப் பற்றிய உண்மையை அறிந்தபோது அதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் தோன்றவில்லை. 


கட்டற்ற தொழில்மயமாக்கல் சூழலை மாசுபடுத்தி மக்கள் வாழ முடியாத வகையில் நச்சாக்குகிறது. அமேசான் காடுகளை எரிப்பது, திரும்ப பெற முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத வகையில் வெப்பம் அதிகரித்து வருவது, பூமியின் இயல்பான வாழ்வை அழிக்கிறது. 


தாய்மண்ணை யாராலும் காப்பாற்ற முடியாது. அவளைக் காப்பாற்ற நானோ, நீங்களோ கூட தேவையில்லைதான். அவளுக்கு வேண்டியது மரியாதை. அதைத் தராத மனிதகுலத்தை அவளால் பழிதீர்த்துக்கொள்ள முடியும். காலம்தோறும் அரசு, தொழில்துறையினர் தாய்மண்ணுக்கு குறைந்தபட்ச மரியாதையைக் கூட அழிக்காமல் அதன் வளத்தை அழிப்பதில் குறியாக இருந்து வந்தனர். இப்போதும் அதே வழக்கத்தை தொடர்கிறார்கள்.   


இயற்கையை பாதுகாப்பதற்கான மதிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை அரசு தவறவிட்டது. 2019ஆம் ஆண்டு என்னுடைய பழங்குடி இனக்குழுவினர். நீதிமன்றத்தில் காடுகளை பாதுகாக்கும்பொருட்டு தொடுத்த வழக்கில் வெற்றிபெற்றனர். ஆனாலும் கூட ஈகுவடார் அரசு அதை பொறுக்க முடியாமல் எங்கள் நிலங்களில் கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுக்க முயல்கின்றனர். ஐ.நா சபையின் பழங்குடி மக்களின் உரிமைகளைக் காக்கும் சட்டத்தைக் கூட அரசுகள் புறக்கணிக்கின்றன. இதற்கு எதிராக எங்கள் உரிமைகளைக் காக்க சண்டையிட்டு வருகிறோம். 


யாசுனி தேசியப்பூங்காவில் கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுப்பதை தடுக்க வேண்டும் என போராடினோம். ஏனெனில் அந்த பகுதி உலகிலேயே பன்மைத்துவ உயிர்களைக் கொண்டது. ஆனால் ஈகுவடார் அரசு கேட்கவில்லை. உலகிலுள்ள பல்வேறு சூழல் ஆர்வலர்களோடு சேர்ந்து போராடினோம். நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல், ஈகுவடார் அரசு இதற்கென தனி வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பழங்குடி இனத்தவரின் கோரிக்கை வென்றது. ஆனால் கூட போராடிய மக்கள், நிம்மதியாக இருக்கமுடியவில்லை. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டேனியல் நோபோ, அந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். நாங்கள் இடைவிடாது அரசோடு போராடும் சண்டையிடும் நிலை இப்படித்தான் உருவாகிறது. 


அரசு, தான் உருவாக்கிய சட்டங்களையே ஏன் கடைபிடிக்க மறுக்கிறது, தங்களது லாபநோக்கத்திற்கு ஏற்ப சட்டங்களை விதிகளை மாற்றிக்கொள்வது சரியா?, குடிமைச்சமூகம் உருவாக்கிய பல்வேறு கருவிகளை வைத்து பழங்குடி மக்களை அழிக்க நினைப்பது ஏன்? உண்மையில் பழங்குடிகளின் உரிமைகளை மறுப்பது எதற்காக? தேர்தல், நீதிமன்றம் போன்றவை கூட தவறாக பயன்படுத்தப்படுவது ஏன்?


வெளிநாடுகளுக்கு சென்று பழங்குடி இனத்தையும் காடுகளையும் பாதுகாக்க ஆதரவு கோரி பேசும் சமயத்தில் எல்லாம் மனம் உடைந்துபோகிறேன். இந்த மக்கள் எத்தனையெத்தனை விஷயங்களுக்கு ஆசைப்படுகிறார்கள், சொகுசு வாழ்க்கையைத் தேடுகிறார்கள். இவர்களின் தேவை கடந்த பேராசைக்காகவே அமேசான் காடுகள் அழிக்கப்படுகிறது. எனது போராட்டப் பேச்சைக் கேட்ட சிலர் என்னை நாயகன் என்று கூறினார்கள். இல்லை நான் நாயகன் கிடையாது. நான் வாழும் வீட்டை பாதுகாக்க நினைக்கிறேன். அவ்வளவுதான். 


அமேசான் காடுகளை எதற்காக அழியாமல் பாதுகாக்கவேண்டும்? அங்குதான் எனது குடும்பம், நண்பர்கள், தாவரங்கள், விலங்குகள், என்னுடைய மக்கள் எல்லோருமே வாழ்கிறார்கள். அங்குதான் எனது கலாசாரம்,  பண்பாடு வாழ்ந்து வருகிறது. காட்டை நம்பி நான் மட்டுமல்ல, நீங்களும் கூட இருக்கிறீர்கள். நமது பூர்வீக வீடான காட்டை அழிக்காமலிருக்க இந்த காரணங்கள் போதாதா?


nenquimo

time 


Nemonte Nenquimo

Waorani leader quichuaNemonte Nenquimo is an Indigenous activist and member of the Waorani Nation from the Amazonian Region of Ecuador. She is the first female president of the Waorani of Pastaza (CONCONAWEP) and co-founder of the Indigenous-led nonprofit organization Ceibo Alliance. Wikipedia

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்