இடுகைகள்

இத்தாலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழகிய ரோம் நகரமே....

படம்
  ரோம் அமைந்துள்ள இடம் இத்தாலி கலாசார இடம் பிக்பாக்கெட்டுகள் ஜாக்கிரதை   இத்தாலியின் தலைநகரம். இங்கு நீங்கள் சென்றாலே கடந்தகாலத்திற்கு உங்கள் நினைவு சென்றுவிடும். 753 -476 காலகட்ட கட்டுமானங்கள் இங்கு உள்ளன. இதனை ரோமுலஸ், ரெமுஸ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். 1980ஆம் ஆண்டு இதனை கலாசார தொன்மை கொண்ட இடமாக அறிவித்தனர். ரோமை சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் கொலோசியத்திலிருந்து பயணத்தை தொடங்கவேண்டும். வெஸ்பியன் மன்னர் கால ரோம் நகரில் 80 ஆயிரம் பேர் உட்காரும் ஆம்பிதியேட்டர் உருவாக்கப்பட்டது. இது பிரம்மாண்டமானது. மன்னர் வெஸ்பியன் உருவாக்கி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இது பயன்பாட்டிற்கு வந்தது.கிளாடியேட்டர்கள் இதில் சண்டை போடுவார்கள். சில காலம் இதில் நீர் நிரப்பி கடல் சண்டைகளுக்கான மாதிரி பயிற்சிகளும் செய்யப்பட்டன. இதற்கு அருகில் ரோமன் ஃபாரம் உண்டு. இதில் அரசு அலுவலகங்கள், கோவில், சதுக்கங்கள் உள்ளன. மிகவும் தொன்மையான இடம். இங்கு கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு வயது 2000. ரோமின் மையமான இடம் என வாட்டிகன் நகரைக் கூறலாம். கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான இடம்.. கத்தோலிக்க கிறிஸ்தவம் பல்வ

பணத்தைப் பின்தொடரும் வன்முறையும் பேராசையும்! - தி டர்னிங் பாய்ன்ட்

படம்
  தி டர்னிங் பாய்ன்ட் தி டர்னிங் பாய்ன்ட் இத்தாலி திரைப்படம் நெட்பிளிக்ஸ்  இத்தாலியில் உள்ள அபார்ட்மெண்ட்டில் முழுப்படமும் நடந்து முடிகிறது. மாஃபியா டான் ஒருவரின் பணத்தை ஜேக் என்ற திருடன் கொள்ளையடிக்கிறான். தப்பிக்கும் முயற்சியில் அவன லூடோ என்ற இளைஞனின் வீட்டுக்கு வருகிறான். ஜேக் ,தான் அங்கு தங்க உதவினால், லூடோவிற்கு பணம் தருவதாக டீல் பேசுகிறான். மாஃபியா டான் தனது பணத்தை பெற எந்த எல்லைக்கும் செல்பவன். பணத்தை திருடன் எளிதாக திருடிப்போக காரணம், அவனது ஆள் என புரிந்துகொண்டு அவனைச் சுட்டுக் கொல்கிறார். இதனால் அடுத்து நாம்தான் என புரிந்துகொள்ளும் டானின் ஆட்கள் இருவர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜேக்கைப் பிடிக்க  வேகமாக தேடி வருகின்றனர். அவர்கள் திருடனைப் பிடித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.  பணத்தை பின்தொடர்ந்து வெறுப்பும், வன்மமும், பேராசையும் எப்படி வருகிறது என்பதுதான் படம் வன்முறை வழியாக காட்டும் மையக்கதை.  ஜேக் பணத்தை ஏன் திருடினான் என்பதை அவனே தனது வாய்மொழியாக லூடோவிடம் சொல்லுமிடம் முக்கியமான காட்சி. ஏறத்தாழ மாஃபியா தலைவனைப் பற்றியும் அவனது கொடூரமான குணத்தை அறிந்த பிறகு, ஜேக் தப்பிச்செல்வ

மறுசுழற்சி செய்யப்பட்ட நைலான் இழையால் தயாரிக்கப்படும் ஆடைகள்!

படம்
  சூழலைப் பாதிக்காத உடைகள் 2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு லஷ்மி சத்யநாராயணன் இடம்பெயர்ந்துவிட்டார். இவர், அதுவரை கைத்தறி ஆடைகளை மட்டுமே அணிந்து வந்தார். ஆனால் அமெரிக்காவிற்கு சென்றபிறகு அதுபோன்ற ஆடைகளை தொடர்ச்சியாக வாங்க முடியவில்லை. அப்போதுதான் அவருக்கு மறுசுழற்சி செய்த பாலிஸ்டர் ஆடைகளைப் பற்றி தெரிய வந்தது.  இவற்றை ஆன்லைனில் வாங்கத் தொடங்கினார்.  செயற்கை இழைகள் என்பது உண்மை என்றாலும் இதனை கழிவாக எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து மறுசுழற்சி எடுத்து சேலையாக நெய்கிறார்கள் என்பது அவரை ஈர்த்திருக்கிறது.  உலகளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட நைலான் பொருட்களை இத்தாலி நிறுவனமான அக்வாஃபில் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், மறுசுழற்சி நைலானில் செய்யப்பட்ட உடைகளை சந்தையில் விற்கிறது. இதில் குப்பைகளாக எஞ்சுவதை மீன்பிடிக்கும் வலைகளாக மாற்றி விற்கிறது. அதற்கும் மேல் கழிவுகளாக மிஞ்சுவதை, உடைத்து இழைகளாக மாற்றுகிறது. இதைத்தான் இகோநைல் இழை என்கிறார்கள்.    இந்திய தலைநகரான டெல்லியில் ப்ளோனி என்ற நிறுவனம் இப்படி மறுசுழற்சி செய்த ஆடைகளை விற்கிறது. உலகில் ஃபேஷன் துறையில்தான் அதிகளவு நுகர்வு இருக்கிறத

காட்ஃபாதர் படத்திலுள்ள நிறைய காட்சிகள் கிளிஷே ஆகிவிட்டன! - விக்கிரமாதித்த மோட்வானே - இந்திப்பட இயக்குநர்

படம்
  விக்கிரமாதித்ய மோட்வானே இந்திப்பட இயக்குநர் காட்ஃபாதர் படம் எடுக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதர்களைப் போலவே படத்திற்கும் நடுத்தர வயது ஆகியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? படத்தில் எந்த ஒரு சிறிய காட்சியையும் நீங்கள் பழசாகிவிட்டது என்று கூறமுடியாது. இதைத்தான்  நேர்மையாக கூறவேண்டும். காட்ஃபாதர் படத்தில் வந்த பல்வேறு காட்சிகளை கிளிஷே என்றுதான் கூறவேண்டும. அந்தளவு படங்களில் பயன்படுத்திவிட்டார்கள். இன்று வரை காட்ஃபாதர் படங்களைப் பார்த்து மாணவர்கள், திரைப்பட இயக்குநர்கள் கற்றுக்கொண்டு இருக்கின்றனர். இதேபோல இந்தியில் எடுக்கப்பட்ட ஷோலே படத்தையும் சொல்லலாம். இந்த படமும் தனித்துவமான தன்மை கொண்டது. அன்றைய காலகட்டத்தில் இந்த படம் அதிக வசூலை செய்தது. அதேபோலத்தான் இன்று ஸ்பைடர்மேன் படமும் வசூலில் சாதனை செய்துள்ளது. இதெல்லாம் சினிமா விரும்பிகளைத் தாண்டி நடைபெறுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.  விக்கிரமாதித்த மோட்வானே திரைக்கதை எழுத்தாளராக காட்ஃபாதர் படத்தின் திரைக்கதையை எப்படி மதிப்பிடுவீர்கள்? படம் மூன்று மணிநேரம் நீளமானது. அதனை சற்று குறைத்திருக்கலாம் என நினைக்கிறேன். படம் இறுதிப்ப

வீடற்றவர்கள், அகதிகளுக்காக உணவகம் தொடங்கி நடத்தும் சமையல்கலைஞர்!

படம்
  சமையல் கலைஞர் மாசிமோ பொட்டுரா உணவை வீணாக்காத சமையல்கலைஞர்!  மாசிமோ பொட்டுரா, புகழ்பெற்ற சமையல்கலைஞர். இவர் இத்தாலியில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். இவரது உணவு தயாரிப்பு என்பது, அன்று கடைக்கு வரும் காய்கறிகளைப் பொறுத்ததுதான். ஒருநாள் கோழிக்கறியும், ஆரஞ்சுப்பழங்களும் கிடைக்கிறது என்றால் அவற்றை வைத்து உணவு வகைகளை உருவாக்குகிறார்.  இந்த வகையில் உணவுப்பொருட்களை வீணாக்காமல் இருக்க  தனி உணவகங்களை தொடங்கியுள்ளார். இதன் பெயர், ரெஃபெடோரியோ அம்புரோசியானோ. உலகம் முழுக்க 13 உணவகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவற்றை உண்மையில் சூப்களை செய்யும் இடம் என்றே அழைக்கவேண்டும்.ஆனால் பொட்டுரோ அதனை அப்படி அழைப்பதில்லை.  அகதிகள், வேலையற்றவர்கள், வீடற்றவர்கள் ஆகியோருக்கு இலவச உணவுகளை தனது உணவகத்தில் வழங்கி வருகிறார். இலவசமாக கொடுத்தாலும் உணவு உண்ண வருபவர்களை கௌரவமாக நடத்தவேண்டும் என எண்ணுகிறார். தனது உணவகத்தில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களிடமும் பொட்டுரோ பொருட்களை முடிந்தளவு வீணாக்காமல் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.   “ உணவு வீணாவதை எனது பாட்டி எப்போதும் விரும்பியதில்லை. அதற்கு தீர்

பொறியாளரின் சுதந்திர வேட்கையை உடைத்து நொறுக்கும் மத, அரசியல் அமைப்புகளின் கோர முகம்! ரோஸ் ஐலேண்ட் 2020

படம்
                ரோஸ் ஐலேண்ட் சுதந்திரமாக வாழ நினைக்கும் பொறியாளரின் கனவை அரசியலும் மதமும் இணைந்து எப்படி அழிக்கின்றன என்பதுதான் கதை.  இத்தாலியில் வாழும் பொறியாளர் ஜார்ஜியா ரோஸ். இவருக்கு தனித்துவமாக வேலைகளை செய்வது பிடிக்கும். எனவே, பிற பிராண்டு வண்டிகளை வாங்கி நம்பர் பிளேட் வைத்து ஓட்டாமல் தானே மோட்டார் காரை வடிவமைத்து அதனை ஓட்டிச்செல்கிறார். இவரது கனவு பெரியது. ஆனால் அதனை உலகம் புரிந்துகொள்வதில்லை. ஏன்  வழக்குரைஞராக இருக்கும் அவரது காதலி கூட புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவர் அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை. அப்படியா ஃபைன் என கடந்துபோய்விடுகிறார். தான் சுதந்திரமாக இருப்பதோடு பிறரும் அப்படி வாழும்படி ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதற்கு காதலி  கோபத்தில் திட்டும் ஒரு வாக்கியம்தான் காரணமாக உள்ளது. நீ வேறு உலகத்தில் வாழ்கிறாய். நானும் நீயும் ஒன்றாக வாழ முடியாது. நீ ஏதாவது சாதிக்கணும்னா அதை உன்னுடைய உலகில் உருவாக்கிக்கொள் என திட்டிவிட்டு சென்று செல்கிறாள் கேப்ரியெல்லா. அந்த வாக்கியம் ரோஸை அதிகம் யோசிக்க வைக்கிறது. எனவே, உடனே தனது தொழிலதிபர் நண்பனைத் தொடர்புகொள்கிறான். அதி

இறந்தவர்களின் உடல்களை என்ன செய்வது? மத்திய அரசு தடுமாற்றம்

படம்
டெம்போ மேகசின் விதிகள் இயற்றப்படாத அபாயம்! கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது மூன்று பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கு எந்த கொள்கைகளும் அரசிடம் இல்லை. தற்போது எய்ம்ஸ் இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  கொரோனாவில் இறந்தவர்களை பிளாஸ்டிக் பேக்கால் மூடிவிடவேண்டும். அவர்களின் உடலிலுள்ள நீர் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இறந்த உடல்களை எரிக்கவேண்டும். புதைக்க கூடாது. இச்செயல்களை செய்பவர்கள் அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது முக்கியம்.  உலகம் முழுக்க ஆறாயிரம் பேர் கொரோனாவால் இறந்துபோயுள்ளனர். இதில் இந்தியாவில் மூன்று பேர் என்று சந்தோஷப்பட முடியாது. காரணம், மக்கள்தொகை அதிகமுள்ள நாடான இந்தியாவில் சீனா அளவுக்கு விழிப்புணர்வு கிடையாது. முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று அலட்சியமாக இருப்பவர்களே அதிகம். மத்திய அரசு இதனை தாமதமாக புரிந்துகொண்டாலும் இதற்கான விதிமுறைகளை அமைக்க குழுவை அமைத்துள்ளது.  டில்லி மேற்குப்பகுதியிலுள்ள ஜானக்புரியைச்

மர்மம்,பீதி தரும் தலையில்லாப் போராளி - டெக்ஸ் வில்லர்

படம்
டெக்ஸ் வில்லர் கலக்கும் தலையில்லாப் போராளி கதை: போசெல்லி ஓவியம் சிவிடெல்லி டெக்சாஸின் தென்பகுதியில் செவ்விந்தியப் போராளி செய்த குற்றங்களை காரணம் சொல்லி, அவரைக் கொடூரமாக ரேஞ்சர்கள் குழு சுட்டுக்கொல்கிறது. அடுத்து அவரை அவமானப்படுத்த தலையை வாளால் வெட்டி, குதிரையில் வைத்துக்கட்டி முண்ட உடலுடன் திரியும்படி குதிரையை விரட்டி விடுகின்றனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கொலையில் தொடர்புடைய ரேஞ்சர்கள், அங்குள்ள மனிதர்கள் சிலர் மர்ம மனிதரால் கொலை செய்யப்படுகிறார்கள். யார் அவர்கள் என கண்டுபிடிக்க மருத்துவர் மோரிஸ்கோ நினைக்கிறார். உதவ வருகிறார் டெக்ஸ் வில்லர். அந்த தலையில்லா போராளி யார்? கற்பனையா? உண்மையா என்பதை அவர் டூமில். தடால், கும் சத்தங்களுடன் கண்டுபிடிப்பதுதான் கதை. லயன் காமிக்ஸ் போட்ட புத்தகம் நல்ல பெரிய சைஸ் என்பதால் கதைகளின் ஓவியம் ஓரத்திற்கு போய்விடாமல் ரசித்துப் படிக்க முடிகிறது. இந்த காமிக்ஸில் டெக்ஸ் வில்லரோடு அவரின் மகனும் உண்டு. இம்முறை புத்தகத்திலுள்ள சண்டைக்காட்சிகளை டெக்ஸின் மகன் பார்த்துக்கொள்ள, மிக லாவகமான எளிதான சண்டைக் காட்சிகளை மட்டும் டெக்ஸ் செய்

பெண்களுக்குத் தேவை வாய்ப்புகள்தான் கருணை அல்ல!

படம்
நேர்காணல் வாய்ப்பு கொடுத்தால் பெண்களாலும் சாதிக்கமுடியும்! அலெசாண்ட்ரா செலெட்டி (ALESSANDRA CELLETTI) இத்தாலியைச் சேர்ந்த கணிதவியலாளர் அலெசாண்ட்ரா செலெட்டி, ரோம் டோர் வர்கட்டா பல்கலையில் கணிதவியலாளராக பணியாற்றி வருகிறார். அலெசாண்ட்ரா, டைனமிக்கல் சிஸ்டம்ஸ், காம் தியரி, செலஸ்டிகல் மெக்கானிக்ஸ் (வளிமண்டல இயக்கவியல்) ஆகி பங்களிப்புக்காக பாராட்டப்பெற்றவர். ஆராய்ச்சிக் கட்டுரைகளோடு பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். கணிதத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள்.உங்களது பள்ளிப்பருவத்திலிருந்தே கணிதம் மீது ஈர்ப்புடையவராக இருந்தீர்களா? எனக்கு இப்போது அந்த காலத்தை நினைவுகூர்ந்து பார்த்தால், ஐந்து வயதில் உறவினர் ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. உனக்கு என்னவாக ஆசை என்று கேட்டார். நான் கணிதம் படிக்கப்போகிறேன் என்று கூறியது மங்கலாக நினைவு இருக்கிறது. செலஸ்டிகல் மெக்கானிக்ஸ்என்று அன்று சொல்லியிருக்கமுடியாது. கணிதம் இல்லாமல் இளம் வயதில் அறிவியல் குறும்படங்களை எடுக்கும் ஆசை தோன்றியது. நீங்கள் அறிவியல் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் செயல்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம