இடுகைகள்

நெகிழ்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் தேங்கியுள்ள மோசமான மனநல குறைபாட்டை, பதற்றத்தை தணிக்கும் உளவியல் சிகிச்சை முறை - ஜோசப் வோல்பே

படம்
  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் ஜோசப் வோல்பே. விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு ராணுவத்தில்சேர்ந்து பிடிஎஸ்டி குறைபாட்டிற்கு சிகிச்சை அளித்தார். இந்த குறைபாட்டை அப்போது வார் நியூரோசிஸ் என்று அழைத்தனர். நோயின் அறிகுறியை அறியாமல் மனநல குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க முயன்றார். இதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார். பிறகு 1960ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு டெம்பிள் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். குண இயல்பு சார்ந்த சிகிச்சை மையம் ஒன்றை உருவாக்கி எண்பத்திரெண்டு வயது வரையில் இயங்கினார். நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.  முக்கியமான படைப்புகள்  1958 psychology by reciprocal inhibition 1969 practice of behavioral therapy 1988 life without fear இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பல உளவியலாளர்களும் பிராய்ட் கூறிய மனப்பகுப்பாய்வு சார்ந்தவற்றில்தான் இயங்கினர். ஆழ்மனதில் உள்ள முரணான சக்திகளால் மனப்பதற்றம் ஏற்படுகிறது என்று கருதி வந்தனர். ஆழ்மனத்தில் உள்ள தன்ன