இடுகைகள்

பிரசவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளை கொன்றொழித்த கர்ப்பிணி மையங்கள் - விக்டோரியா கால கொடுமை

படம்
  பேபி ஃபார்மிங் என்றொரு காலம் மேற்குலகில் இருந்தது. தமிழில் குழந்தை விவசாயம் என்று சொன்னால் கண்றாவியாக இருப்பதால், குழந்தை உற்பத்தி அல்லது உருவாக்கம் என சொல்லலாம். தருமொழி, பெறுமொழி பிரச்னையால் இப்படி மாற்றிக்கொள்வோம்.   மேற்கு நாடுகளில் டீன் ஏஜ் காலங்களில் பெண்கள் தனியாக சுற்றத் தொடங்குவார்கள். தனக்கான இணையைத் தேர்ந்தெடுப்பார்கள், செக்ஸ் வைத்துக்கொள்வதும் கூட சகஜமானது. செக்ஸ் இயற்கையானதும்தானே? செக்ஸ் வைத்துக்கொண்டு குழந்தை உருவாகி அதை வளர்த்தெடுக்கும் திடமான மனம் கொண்ட பெண்கள் மேற்குலகில் உண்டு. பொதுவான இந்தியச் சமூகத்தில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றெடுத்தால் தே*** என்று கூறுவார்கள். இங்கு நான் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். அதே சூழல் மேற்கு நாடுகளிலும் அப்போது இருந்தது. இப்படி ஒரு அவமானம் நமக்கும் குடும்பத்திற்கும் வரக்கூடாது என விக்டோரியா கால ஆட்கள் நினைத்தனர். எனவே, கல்யாணம் ஆகும் முன்னரே வயிற்றை தள்ளிக்கொண்டு வாந்தி எடுத்த வாரிசுகளை தனியாக இருக்கும் கர்ப்பிணி இல்லங்களில் சேர்த்து பராமரித்தனர். இதற்கு அந்த இல்லங்களுக்கு குறிப்பிட்ட அளவில் காசு

வலியைத் தாங்குவதில் யார் பெஸ்ட் - ஆணா, பெண்ணா? உண்மையா? உடான்ஸா?

படம்
  கீமோதெரபி தலையில் வளரும் முடியில் மாற்றம் ஏற்படுத்துகிறது! உண்மை. புற்றுநோயாளிகளுக்கு நோய் பாதிப்பைக் குறைக்க கீமோதெரபி கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, தலையில் முடிகொட்டும். இதை தவிர்க்க நோயாளிகளுக்கு முடியை மொட்டையடித்துவிடுகிறார்கள். இதற்குப் பிறகு முளைக்கும் முடியின் நிறமும், அதன் வடிவமும் சற்றே மாறியிருக்கும். தலைமுடியின் உரோமக்கால்கள் கீமோதெரபியால் மாற்றம் பெறும். இதன் விளைவாகவே முடியின் வடிவம், நிறம் மாறுகிறது. ஆனால் இது நிரந்தரமான மாற்றம் அல்ல. ஓராண்டிற்குள்  முடியின் வடிவமும் நிறமும் இயல்பானபடி மாறிவிடும்.  ஆண்களை விட பெண்களால் அதிகளவு வலியைத் தாங்கமுடியும்! உண்மை. குழந்தையை பிரசவிக்கும் பெண்களைப் பார்த்து இதனை எளிதாக யூகித்துவிடலாம். ஆராய்ச்சிகளின் அடிப்படையில் குழந்தை பிறக்கும் காலத்தில் பெண்களின் உடலில் வலியைத் தாங்கும் திறன் அதிகரிக்கிறது என  ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு அவர்களின் உடலில் அதிகரிக்கும் ஹார்மோன்களின் அளவு முக்கியக் காரணம். பொதுவாக வலியைத் தாங்கும் திறன் பற்றி ஆராய்ந்தால், அதற்கு ஒருவரின் வயது, சாப்பிடும் உணவு, செய்யும் வேலை ஆகியவற்றைப் பற்றியும் கவனம்