இடுகைகள்

செக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்த்த எழுத்தாளர் மிலன் குண்டெரா! - அஞ்சலி

படம்
  எழுத்தாளர் மிலன் குண்டெரா -படம் லே மாண்டே எழுத்தாளர் மிலன் குண்டெரா படம்-பாரிஸ் ரிவ்யூ சர்வாதிகாரத்தை எதிர்த்த சுதந்திர எழுத்தாளர்! மிலன் குண்டெரா, தனது நாவல்களை பாலிபோனிக் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இவரது அப்பா, இசைக்கலைஞர். இசைக்குறிப்புகளை அப்படியே வாசிக்காமல் இதயத்தில் உள்ள உணர்வுகளை இசையாக மக்களுக்கு கொடுத்தவர். தனது நாவலில் மனிதர்கள், வாழ்க்கை, அவர்களின் குரல்களை ஒன்றாக கொடுப்பதால் அதை இசைக்கோவையாக மிலன் நினைக்கிறார். 1968ஆம் ஆண்டு மிலன் தி ஜோக் என்ற நாவலை எழுதினார். இந்த நூல் செக் நாட்டில் நன்றாக விற்றது. ஏராளமான மக்கள் அதை வாங்கி படித்தனர். அப்போது கம்யூனிஸ்ட்   கட்சி ஆட்சியில் இருந்தது. பின்னாளில், செக் நாட்டிற்குள் ரஷ்யா நுழைந்த பிறகு நிலைமை மாறியது. அவரின் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டது. அவர் கவின்கலைக் கல்லூரியில் செய்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பிழைக்கும் சில வேலைகளை செய்தாலும் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படக்கூடாது என அரசு பலரையும் மிரட்டியது. எனவே, மிலன் ஃபிரான்ஸ் நாட்டுக்குச்   சென்றார். கூடவே அவரது மனைவி வெரா இருந்தார். ‘’நேர்மறை

சதுரங்க கட்டத்திற்குள் வைத்து வஞ்சக மனிதர்களை வீழ்த்தும் கில்லாடி! - செக் - சந்திரசேகர் யெலட்டி

படம்
                  செக் சந்திரசேகர் யெலட்டி தீவிரவாத தாக்குதலில் மாட்டிக்கொள்ளும் ஸ்மார்ட் திருடன் ஆதித்யா , எப்படி சிறையிலிருந்து ஆப்ரகா டாப்ரா சொல்லித் தப்பிக்கிறான் என்பதுதான் கதை . தெலுங்கு சினிமா என்றாலும் சந்திரசேகர் யெலட்டியைப் பொறுத்தவரை படத்தின் சுவாரசியம் எங்கேயும் ஒரு பிரேம் கூட குறையாது . இந்தப் படத்திலும் கூட அதையேதான் எதிர்பார்க்கிறோ்ம் . படத்தையும் அதேபோல நுணுக்கமாக எடுத்திருக்கிறார் . படத்தை முழுமையாக பார்த்தபிறகு ஷஷாங்க் ரிடெம்ஷன் பாதிப்பில் படம் எடுத்திருக்கிறாரோ என்று பலருக்கும் தோன்றும் . அந்த படத்தின் பாதிப்பு திரை ரசிகர்களுக்கே இருக்கும்போது இயக்குநருக்கு இருக்காதா ? ஆதித்யா , ஸ்மார்ட்டாக ஏடிஎம் கார்டு திருடுவது , நுட்பமாக பல்வேறு இடங்களில் புகுந்து பணத்தை அபேஸ் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறான் . ஆனால் அவன் சந்திக்கும் யாத்ரா ( எ ) இசபெல் என்ற பெண் அவனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப் போடுகிறாள் . ஆம் இரண்டே காட்சிகளில் காதல் பூக்கிறது . இப்படியெல்லாம் நடக்காதே என்பதற்குள் கல்யாணி மாலிக்கின் அழகான இசையில் கொண்டாட்டமா