இடுகைகள்

விஜயசாந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுரத்தே இல்லாத சவால்களும், மாறுவேட குத்தாட்டங்களும்!

படம்
  சாணக்யா சபதம் சிரஞ்சீவி, விஜயசாந்தி,கோபால்ராவ் விமானநிலையத்தின் கஸ்டம்ஸ் அதாவது சுங்கத்துறை அதிகாரி சாணக்யா, கள்ளக்கடத்தல் தொழிலதிபருடன் மோதி வெல்லும் கதை.  படத்தில் பாடல்களும் அதற்கு நாயகனும் நாயகனும் ஆடினால் போதும் என்ற மனநிலையில் எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி இந்த படத்தில் வேறு எந்த அம்சமும் உருப்படியாக இல்லை. சுங்கத்துறையில் வேலைக்கு வரும் முதல்நாளே நாயகியைக் காப்பாற்றி கடத்தல் செய்யப்பட்ட வைரங்களை பிடித்துக்கொடுக்கிறார் நாயகன் சாணக்யா. சுங்கத்துறையின் தலைவருக்கு கள்ளக்கடத்தல் செய்யும் தொழிலதிபர் மீது நல்ல அபிப்ராயம் உள்ளது. இதை அறிந்த சாணக்யா, தனது விசாரணையை அமைதியாக செய்யாமல் சவால் விடுவது எனது குணம். என் பெயர்தான் சாணக்யா என லூசு தனமாக ஏதோ பேசுகிறார். வில்லனிடமே இப்படி பேசி பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். வில்லனும் சாதாரணமான ஆள் இல்லை. வில்லனின் மகன் விமானியாக உள்ளார். அதை வைத்து பொருட்களை கடத்தல் செய்கிறார். இதை விமான பணிப்பெண் சசிரேகா, கண்டுபிடித்து நாயகனுக்கு தகவல் கொடுக்கிறார். இப்படித்தான் கதை நகர்கிறது. நாயகன், வில்லனின் விமானி மகனை ஆதாரத்துடன் பிடித்து நீதிமன்றத்தில ஒ

அத்தையின் கொட்டத்தை அடக்கி ஒட்டுமொத்த குடும்பத்தை ரேஷன்கார்டில் சேர்க்கும் அல்லுடு! - அத்தாக்கு மொகுடு - சிரஞ்சீவி

படம்
  அத்தாவுக்கு மொகுடு சிரஞ்சீவி, விஜயசாந்தி, பிரம்மானந்தம் இதுவும் ரஜினி நடித்த படம்தான். இதில் மாமியாரின் ஆணவத்தை மருமகன் எப்படி அடக்கி அவளின் குடும்பத்தை ஒன்றாக சேர்க்கிறான் என்பதே கதை.   படம் வெற்றி பெற்றது என்றாலும் பெரிய முரண், திருப்புமுனை என்பதெல்லாம் இல்லை. நகைச்சுவையோடு உள்ள படம். இன்று சீரியல்கள் வரிசையாக ஓடும் காலத்தில் இந்த படம் நெடுந்தொடர்களைத்தான் மீண்டும் நினைவுபடுத்துகிறது.  படத்தை தன் தோளில் தூக்கி சுமந்திருப்பது, சிரஞ்சீவிதான். படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் உள்ளது. அத்தனையிலும் தனியாக தெரியும் ஆட்கள் என்று பார்த்தால் யாருமில்லை.  இதில், விஜயசாந்தி எப்படி சிரஞ்சீவியை காதலிக்கிறார் அதாவது கல்யாண் என்ற பாத்திரத்தை என்று பார்த்தால், தலையே சுற்றிப்போகும். தன் தோழியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று இன்னொருவருக்கு மணம் செய்விக்கிறார். இதற்காக பெண்ணின் பெற்றோரை முந்திக்கொண்டு காவல்துறையில் புகார் கொடுக்கிறார். அதில்தான், கல்யாணின் குணம் புரிந்து குற்றவுணர்வு கொண்டு காதல் வயப்படுகிறார். இந்த காட்சிகளெல்லாம் அடடா, அப்பப்பா ரகத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள். விஜயசாந்தியின

பெரிய அண்ணனைக் கொன்றவர்களை ஒன்றாக சேர்ந்து கொல்லும் குடும்பம்! - கேங்லீடர் - சிரஞ்சீவி, விஜயசாந்தி

படம்
                  960 × 960                         கேங் லீடர் சிரஞ்சீவி, விஜயசாந்தி, கிருஷ்ணா, ஆனந்தராஜ் இயக்கம் விஜயா பாபிநீடு இசை பப்பி லகிரி மூன்று அண்ணன் தம்பிகள். இவர்களுக்குள் உள்ள பாசமும், பின்னாளில் ஏற்படும் முரண்பாடுகளும்தான் கதை. ரகுபதி மட்டுமே ஆபீஸ் வேலைக்கு செல்பவர். ராகவன், குடிமைச் தேர்வுகளுக்காக படித்துக்கொண்டிருக்கிறார். ராஜாராம் வேறு யார் சிரஞ்சீவிதான். படித்துவிட்டு தனது கேங் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவர்கள் மொத்தம் ஐந்து பேர் கொண்டு குழு. இந்த குழுதான் படம் நெடுக வருகிறது. படத்தின் திருப்புமுனையே ராஜாராமின் நண்பர்கள்தான். ராஜாராமைப் பொறுத்தவரை வேலை என்பது கிடைக்கும்போது செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் விட குடும்பம், பெருமை முக்கியம் என நினைக்கிற ஆள். ராகவனின்  தேர்வு செலவுகளுக்காக அவர் அறை ஒன்றை காலி செய்து கொடுக்க போகிறார். அங்குதான் நாயகி அறிமுகம். இவர் யாரென படத்தில் யாருமே கேட்பதில்லை. பெற்றோர் இருக்கிறார்களா, இல்லையா என்று. இறுதியில் அவரே தான் யார் என்று சொல்லுகிறார். அதுதான் முக்கியமான ட்விஸ்ட். நமக்கு அது பெரிய ஆச்சரியம் தருவதில்லை. நமக்