இடுகைகள்

அடால்ஃபோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதைமருந்து கும்பலின் வணிகம் சிறக்க நரபலி கொடுத்த மத தலைவர்!

படம்
  கான்ஸ்டான்ஸோ – அடாஃபோ டி ஜீசஸ் 1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பிறந்தவர், அடால்ஃபோ. மியாமியில் வாழ்ந்தவர்கள், க்யூப நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள். அடால்ஃபோ குழந்தையாக இருக்கும்போது அவரின் அம்மா, புவர்டோ ரிகா சென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.அடால்ஃபோவுக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள். இவர்கள் அனைவருமே வெவ்வேறு தந்தைகளுக்குப் பிறந்தவர்கள்.   கத்தோலிக்கராக மாறி வழிபடத் தொடங்கியது அவரின் குடும்பம். இரண்டாவது தந்தை இறந்தபோது, குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று நல்ல நிலையில் இருந்த து. மியாமிக்கு வந்த அடால்ஃபோவின் அம்மா, ஆடு, கோழி ஆகிவற்றின் தலைகளை அறுத்து வைத்து தாந்த்ரீக சடங்குகளை செய்யத் தொடங்கினார். இதனால் ஊரார் அவரை சூனியக்காரி என கூறத் தொடங்கினார். அடால்ஃபோவின் அம்மா, அவருக்கு புதிய மதமான சான்டெரியாவை அறிமுகம் செய்தார். அந்த மதத்தை தழுவியவர், மெல்ல காட் ஃபாதராக மாறினார். அவர், போதைமருந்து குழுக்களோடு தொடர்பு வைத்து வசதியாக வாழ்ந்தார். ‘’நம் ம தத்தை நம்பாத ஆட்களை போதைப்பொருளை வைத்து கொல்லலாம். அவர்கள் முட்டாள்தனத்தை வைத்து பணம் சம்பாதிக்கலாம்’’ என்றார். அடால்ஃபோவுக்கு