இடுகைகள்

இந்தியா - பத்ம விருதுகள் 19 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்ம விருது கௌரவம்!

படம்
  இந்திய அரசு, குடியரசு தின விழாவில் நூற்று பனிரெண்டு நபர்களுக்கு பெருமைக்குரிய பத்ம விருதுகளை  அறிவித்துள்ளது பத்ம விருதுகள் 1954 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசால் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் மட்டுமே இருந்ததன. பின்னர் அடுத்த ஆண்டு ஜன.8 அன்று பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இதனுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டன. பாரத ரத்னா விதி! விருதுப் பரிந்துரைகளை பிறர் அல்லது நாமே சுயமாக பரிந்துரைத்து இந்திய அரசுக்கு அனுப்பலாம். இதில் பாரத ரத்னா விருது மட்டும் இந்திய பிரதமர் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்து வழங்குகிறார். இதுவரை 45 பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஓராண்டுக்கு மூன்று பாரத ரத்னா விருதுகளை மட்டுமே வழங்க முடியும். பத்ம விருதுகளை ஆறுபேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கிறது. இந்தியப் பிரதமரை தலைவராக கொண்ட இக்குழுவில் உள்துறை செயலர், குடியரசுத் தலைவரின் செயலர், கேபினட் செயலர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். அண்மையில் இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுப்பட்டியலில் 12 விவசாயிகள், 14 மருத்து