இடுகைகள்

தெர்மாமீட்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலின் வெப்பநிலை அளவுகள் மாறிவருகின்றன!- பழங்குடிகளிடம் செய்த ஆய்வில் தெரிய வரும் உண்மைகள்!

படம்
      சட்டென மாறுது உடலின் வெப்பநிலை ! சராசரியாக கருதப்பட்ட 37 டிகிரி செல்சியஸ் உடல் வெப்பநிலை , தற்போது உலக நாடுகளில் வாழும் மக்களிடையே மாற்றம் காணத் தொடங்கியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் . அமெரிக்கா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் சராசரி உடல் வெப்பநிலை , மெல்ல 37 டிகிரி செல்சியலிருந்து மாற்றம் கண்டு வருகிறது . பொலிவியா நாட்டில் பழங்குடி மக்களின் உடல்நிலை பற்றிய ஆராய்ச்சி 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . இதுதொடர்பான ஆய்வு அறிக்கை சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது . இதிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பொருத்திப்பார்த்தால் பொதுமக்களின் உடல்வெப்பநிலை மாறுபடுவதற்கான காரணங்களை புரிந்துகொள்ள முடியும் . 1851 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் கார்ல் ரெய்ன்கோல்டு ஆகஸ்ட் வொண்டர்லிச் , 25 ஆயிரம் நோயாளிகளை ஆராய்ச்சி செய்து தெர்மாமீட்டருக்கான அளவீட்டை உருவாக்க முயன்றார் . 1868 ஆம் ஆண்டு கார்ல் எழுதி வெளியிட்ட நூலில் , மனிதரின் சராசரி உடல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்று உறுதி செய்து கூறினார் . அண்மையில் வெளியான பல்வேறு

அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்!

படம்
அல்ட்ரா சென்சிடிவ் தெர்மாமீட்டர்! டெல்லியைச் சேர்ந்த ஜாமியா ஆராய்ச்சியாளர்கள் குழு 27 டிகிரி முதல் -196 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிராபீன் டாட்ஸ் முறையில் தயாரிக்கப்பட்ட தெர்மோமீட்டர் இது. இதில் மைக்ரோ கெல்வின் அளவிலான மாறுதலையும் கண்டுபிடிக்க முடியும். இந்த தெர்மோமீட்டரை ஷேக் எஸ் இஸ்லாம் என்ற நானோசயின்ஸ்  தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த இயக்குநர் தலைமையிலான குழு கண்டுபிடித்திருக்கிறது. செல்சியஸ் வெப்பநிலையில் மாறும் மாறுதல்களை 300 மில்லி செகண்ட்ஸ் வேறுபாட்டில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது இது. ஓராண்டில் ஏறத்தாழ 50 சுழற்சி முறைகள் உண்டு. இதில் அல்ட்ரா ஃபாஸ்ட் முறையில் தெர்மோமீட்டர் செயல்படுகிறது. நன்றி: நானோஸ்கேல் அட்வான்சஸ் படம் - செய்தி: தி இந்து