தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்தவர், தாவோயிச முன்னோடி வீரராக அடையாளம் கருதப்பட்டால்....
டீமன் இன் மவுண்ட் குவா 76 அத்தியாயங்கள்--- மங்காகோ.காம் தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்த சியோம் என்பவரை மவுண்ட் குவா இனக்குழுவின் ஹான்வோ தோற்கடித்து சிறைபிடிக்கிறார். பின்னாளில், சியோம் சிறையில் இருக்கிறார் என்பதையே மவுண்ட் குவா இனகுழுவினர் மறந்துவிடுகிறார்கள். சியோம் திரும்ப மவுண்ட் குவா இனக்குழுவின் மூத்ததலைவர் என பொய் சொல்லி ஏமாற்றி, அக்குழுவினரை சக்தி வாய்ந்த இனக்குழுவாக எப்படி மாற்றுகிறார் என்பதே கதை. சியோம், கைதி என்றாலும் தற்காப்புக்கலை கற்றதால் அவர் காயம்பட்டாலும் சாவதில்லை. தற்காப்புக்கலை அழிக்கப்பட்டாலும் அது மீண்டும் உயிர்பெறுகிறது. உடல்பயிற்சி, ஆன்ம ஆற்றல் தியானம்செய்து மீண்டு வருகிறார். வயதான தோற்றம் கூட மெல்ல இளமையாக மாறுகிறது. அதாவது முதிர்ந்தவராக இருந்த தோற்றம் நடுத்தர வயதுகொண்டவராக மாறுகிறது. வயது கூடுவதில்லை. மவுண்ட் குவாவிலுள்ள சிறை, குகையில் உருவாக்கப்பட்டது. மழைபெய்ந்து பாறை அரித்து சிதைவடைகிறது. அதைப் பயன்படுத்தி பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வருகிறார். வந்து பார்த்தால், அவருக்கு உணவு கொண்டு வந்த பையனே எழுபது வயதானவராக மாறியிருக்கிறார். ஆனால்,...