சமூகத்திட்டங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்? சிஎஸ்ஆர் 3



Image result for CSR




அத்தியாயம் 3



பெருநிறுவன சமூகப் பொறுப்பு!
திட்டமிடுவது எப்படி?


சமூகப் பொறுப்புத் திட்டத்தில் திட்டங்கள் தீட்டுவது, அதற்கான நிதி ஒதுக்குவது ஆகியவற்றோடு சில முக்கிய அம்சங்களும் உண்டு.  சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதோடு நிறுவனங்களின் பொறுப்பு முடிந்துவிடாது. திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான குழுக்களை உருவாக்க வேண்டும். இவர்கள்தான் நிறுவனங்களின் திட்டங்களை மக்களுக்கு ஏற்றபடி உருவாக்கி உதவுவார்கள்.

அடுத்து, ஊழியர்களுக்கான வேலை விதிமுறைகள், தீண்டாமை அகற்றுதல், சூழல் பாதுகாப்பு ஆகியவையும் இதில் உள் அடங்கலாக உள்ளன. உலக நாடுகளில் இந்தியாவில் மட்டும்தான் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதில் செலவழிக்கப்படாத நிதி, அரசு கணக்குக்கு மாற்றப்படுவதும் கூட ஒருவகை வரி என்றே நிறுவனங்கள் நினைக்கக்கூடும்.
பெருநிறுவனங்கள் அளவுக்கு சிறுகுறு நிறுவனங்களிடம் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை வலியுறுத்த முடியாது. காரணம், அவர்களின் தொழில்முதலீடு சிறியது என்பதால்தான். ஆனால் இன்று சிறு நிறுவனங்கள் உள்ளூர் மக்களிடம் சமூகத் திட்டங்களை செயற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Image result for CSR




விதிகளும் செயல்களும்!


5 கோடி ரூபாய்க்கும் அதிகமான லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் 2 சதவீத நிதியை சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என்பது புதிய விதி. இந்தியாவில் இந்த விதி, அமலுக்கு வரும் முன்பே பல்வேறு இந்திய நிறுவனங்கள், சமூகச் செயற்பாடுகளைச் செய்து வந்தன. இந்த விஷயத்தில் இந்தியா மேற்குலகுக்கு முன்னோடி.

சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களால் குறிப்பிட்ட பகுதியிலுள்ள கல்வி, வறுமை, சமூகப் பிரச்னைகள் ஆகியவை தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. தீர்க்கப்படாதபோதும், அவை அடையாளம் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. நிறுவனங்கள் இப்பணியைத் தன்னார்வ நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுச் செய்கின்றனர்.

தொழில்மயமாக்கலுக்கு முன்னர், 1850 ஆம் ஆண்டு இந்தியத் தொழிலதிபர்கள் கலாசாரம், மக்களின் நம்பிக்கை சார்ந்து சமூகப் பொறுப்புணர்வுப் பணிகளைச் செய்தனர். டாடா, கோத்ரெஜ், மோடி, பஜாஜ், பிர்லா, சிங்கானியா ஆகியோர் அன்று புகழ்பெற்ற  நாடறிந்த தொழிலதிபர்களாக இருந்தனர்.

அறக்கட்டளைப் பணி!


19ஆம் நூற்றாண்டு தொழிலதிபர்களான இவர்களின் காலத்தில் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்கள் மாற்றம் பெற்றன. இவர்கள் தம் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் கோவில்கள், பள்ளி, குடிநீர் வசதி ஆகியவற்றைச் செய்து வந்தனர். சமூகம் சார்ந்து மட்டுமல்ல; அரசியல், மதம் சார்ந்த செயற்பாட்டிலும் இப்பணிகள் நிறைவேறின என்பதே அக்காலகட்ட உண்மை.


Image result for CSR

இதற்கடுத்த காலகட்டம் சற்று மாறுபட்டது. அப்போது, இந்தியாவில் விடுலைப் போராட்டங்கள் நடந்து வந்தன. காந்தி,  தொழிலதிபர்கள் குறிப்பிட்ட தொகையை சமூகத்திற்காக முதலீடு செய்யும் தர்மகர்த்தா முறையை (Trusteeship) அறிவித்தார். அறக்கட்டளைகளை உருவாக்கி அதன் மூலம் பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நிறுவனங்களை உருவாக்குவதை காந்தி முன்மொழிந்தார். இதன்படி பல்வேறு தனியார் நிறுவனங்கள் உருவாகின.
1960 - 80 காலகட்டத்தில் இந்தியா கலப்பு பொருளாதார திட்டங்களை செயற்படுத்தத் தொடங்கியிருந்தது. பொதுத்துறை நிறுவனங்களே ஆதிக்கம் பெற்றிருந்தன. 1965 இல் கல்வி நிறுவனங்கள், அரசியல்வாதிகள் இணைந்து உருவாக்க முயன்ற சமூக பொறுப்புணர்வுத் திட்ட அமைப்பு தோல்வியில் முடிந்தது.


ஆதாரம்:
http://www.yourarticlelibrary.com/corporate/concept-of-corporate-social-responsibility-csr-as-a-driving-force-for-business/22094
Evolution of Corporate Social Responsibility in India -Sawati Nagwan 11 Ph. D. Research Scholar JJTU, Jhunjhunu, Rajasthan, India


நன்றி - தினமலர் பட்டம்