இசையை திட்டமிட்டு உருவாக்குவதில்லை! - ரோஜர் ராபின்சன்





ரோஜர் ராபின்சன்

கவிஞர் ரோஜர் ராபின்சன், தனது கவிதைகளுக்காக (தி போர்ட்டபிள் பாரடைஸ்) டி.எஸ். எலியட் பரிசை வென்றிருக்கிறார். அவரிடம் அவருடைய படைப்பு பற்றி பேசினோம். 


பரிசு வென்றது எப்படியிருக்கிறது?

நான் கவிதை எழுதிவிட்டு அதற்கு பரிசுகளை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முடிந்தளவு என்னுடைய கவிதைகளை மக்கள் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பரிசு மூலம் கவனம் ஈர்க்கப்பட்டு மக்கள் கவிதைகளை வாசித்தால் நல்லது. 

எலியட் கூட அமெரிக்காவில் பிறந்தவர்தான். ஆனால் அவர் வாழ்ந்தது முழுக்க இங்கிலாந்தில். அதேபோல நீங்கள் இங்கிலாந்தில் பிறந்து டிரினாட்டில் சிறுவனமாக இருக்கும்போது சென்றிருக்கிறீர்கள்.  பின்னர், இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறீர்கள். படைப்புக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறது. 

படைப்புக்கு டிரினாடுதான் சரியான இடம். ஆனால் இங்கிலாந்தில் வணிகச்சந்தை உள்ளது. பதிப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் இங்குள்ளன. 

உங்களை கார்டியன் பத்திரிகை டப் கவிஞர் என்று அழைத்திருக்கிறதே?

முன்னர் சில டப் ஆல்பங்களை நான் செய்திருக்கிறேன். அதனால் மக்கள் என்னை இப்பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். ரகே எனும் இசைமுறையில் பிறந்தது டப் பிரிவு. நான் இப்பெயரிலேயே அழைக்கப்பட விரும்பவில்லை என்பதே உண்மை. 

கிங் மிடாஸ் சவுண்டு என்ற பெயரில் இசைக்குழுவை நடத்தி வருகிறார்கள். ஒரு படைப்பை எப்படி உருவாக்குகிறீர்கள்?

நான் அப்படைப்பை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பாடல்களை எழுதுவதில்லை. இசைப்பதும் இல்லை. அது படைப்பாக தானாக என்னுள் உருவாகிறது. திட்டமிட்டபடி இசையை யும் கவிதையையும் உருவாக்குவதில்லை. 

உங்கள் கவிதைகளில் சில இடங்களில் நம்மை விட பெரிய சக்தி ஒன்றை வணங்குவது போன்ற தன்மையில் எழுதியிருக்கிறீர்கள். 

பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை அந்த வரிகள் சொல்லுகின்றன. மக்கள் அதனை அப்படியே புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். 

நன்றி - குளோபல் வாய்ஸ் 







பிரபலமான இடுகைகள்