காதல் தோல்வியின் வலிக்கு பிற பெண்களைக் காதலிப்பதே மருந்து என காதல் வெறியில் அலையும் நாயகன்!
மனு சரித்திரா தெலுங்கு சிவா, பிரியா, மேகா, இசை கோபி சுந்தர் காதலுக்கு மருந்து காதலே என பெண்களை காதலித்து கைவிடும் வினோதமானவனின் கதை. ஒருவரியில் நாயகனின் கதை கேட்க பரவாயில்லை என்றாலும் அதை படமாக்கிய விதம் நம்மை கடுமையாக சோதிக்கிறது. நாயகன் மனு, ஜெனிஃபர் என்ற பெண்ணை கல்லூரியில் பார்க்கிறான். காதலிக்கிறான். ஆனால், அந்த காதல், காதலியின் சகோதரர்களால் கைகூடாமல் போகிறது. அந்த காதல் தோல்வியில் விழுந்த நாயகன், திருமணமான காதலியை நினைத்து மது, போதைப்பொருள், சிகரெட் என பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிறான். அப்போது நெருங்கிய நண்பன் சொன்ன யோசனையின் பேரில் ஜெனிஃபரை கற்பனை செய்துகொண்டு பிற பெண்களை காதலிக்க தொடங்குகிறான். காதல் மட்டுமே பெண்கள் யாரேனும் கல்யாணம் என்று பேச்சு எடுத்தால் உடனே பிரேக்அப் சொல்லி கிளம்பிவிடுகிறான். காதல் என்றால், காதலியை படுக்கையில் வீழ்த்தி பயன்படுத்திக்கொள்வது நாயகன் மனுவுக்கு ஒத்துவராத ஒன்று. தொடுவது, முத்தம் கூட இல்லாத டி ராஜேந்தர் வகை பரிசுத்தமான நாசூக்கான காதல். அதேநேரம், காதலிகளுக்கு பரிசாக நகையோ, உணவோ வாங்கித்தருவதில் கஞ்சத்தனமும் காட்டுவதில்ல...