இடுகைகள்

நர ரோகித் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

படம்
  பிரதிநிதி தெலுங்கு  இயக்கம் பிரசாந்த் மந்தரா நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல.  முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.  நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்திரமாகிறார். அவரின் பெயர

சதிகளை தகர்த்து குற்றவாளியை தூக்கில் போட துடிக்கும் சிறை அதிகாரி! அசுரா

படம்
சில்வர்ஸ்க்ரீன் அசுரா இயக்கம்: கிருஷ்ண விஜய் இசை: சாய் கார்த்திக்   சிறையில் ஜெயிலராக உள்ள தர்மா, குற்றம் என்ற ஒன்றை ஒருவனிடம் கண்டால் இரக்கம் இல்லாதவனாகிவிடுவார். அடித்து கை, கால்களை உடைப்பது என சக காவல்துறையினரே அவரை ராட்சசன் என்று அழைக்கும்படி நடந்துகொள்கிறார். அவரது காதலியின் தந்தையிடம் பெண் கேட்கும்போதும் கூட நீங்கள் விரும்பினால் திருமணம் உங்கள் சம்மதம் பேரில் நடக்கும். இல்லையென்றால் நாங்களே செய்துகொள்வோம் என முரட்டுத்தனமாக பேசிவிட்டு வருகிற ஆள். இப்படிப்பட்டவரின் இடத்திற்கு வைர வியாபாரி சார்லி, தன் அப்பாவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த பிள்ளைகளைக் கொன்றுவிட்டு மரணதண்டனை பெற்று வருகிறான். அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தர்மாவின் டூட்டி. சார்லியை பார்த்தாலே தர்மாவுக்கு ஆகவில்லை. எப்படி சாகப்போகிறாய் பார் என மிரட்டிக்கொண்டிருக்கிறார் தர்மா. சார்லி, சிறையில் உள்ள தன்னால் போலீசிடம் சிக்க வைக்கப்பட்ட பாண்டு என்பவனைச் சந்திக்கிறான். அவனுக்கு வைர ஆசை காட்டி தன்னை சிறையிலிருந்து மீட்க சொல்கிறான். பாண்டு விடுதலையான பிறகு சார்லியை மீட்டானா, தர்மா இந்த சதியைக் கண்டுபிடித்தானா, அவனை