சைக்கோ தந்தையால் நினைவுகள் அழிக்கப்பட்ட மகனின் அவல வாழ்க்கை!
சைக்கோ தந்தையால் நினைவுகள் அழிக்கப்பட்ட மகனின் அவல வாழ்க்கை! அரிது அரிது இயக்குநர் மதிவாணன் இசை தமன் இந்த படத்தின் இயக்குநர், ஒரு பெரிய இயக்குநரின் உதவியாளராக வேலை செய்தவர். அந்த பெரிய இயக்குநர் போலியான சமூக கருத்துகளை அவரது சாதிக்கு ஏற்றபடி கூறுபவர். தமிழர்களின் கருப்பு நிறத்தை அவமதிப்பவர். மூன்று சதவீத உயர்சாதியை போற்றுபவர்.அவரிடமிருந்து வந்தேன் என விளம்பரம் வேறு. இந்த படத்தின் வீடியோக்கு கீழே உள்ள குறிப்புகளில் இயக்குநர் பற்றி அப்படியே பதிவாகியுள்ளது. படத்தில் ஒரு நரம்பியல் மருத்துவர் இருக்கிறார். கடற்கரையில் வாக்கிங் வந்தவருக்கு அங்குள்ள இரைச்சலான சூழ்நிலை பிடிக்கவில்லை. அங்கேயே அவரை மடக்கி பிடித்த மனித உரிமைக்குழு போலீஸ் போல விசாரணைக்கு இழுத்து செல்கிறது. எதற்கு? அவரது மகன் பேச முடியாமல் நடைபிணம் போல மாறிவிட்டார். எதற்கு அப்படி மாறினார், அதில் அப்பாவான மருத்துவரின் பங்கு என்னவென கேட்கிறார்கள். கதை உடனே மருத்துவரின் நினைவுகளில் ஓடுகிறது. படத்தைப் பார்க்கும் நமக்கு பெரும்பாலான கதை, வசனமாகவே ஒலிக்குறிப்பாகவே கூறப்படுகிறது. காட்சியாக பெரிய மாற்ற...