இடுகைகள்

புதுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரிய ஆற்றலை புதுமையான முறையில் சேமிக்கும் இஸ்ரேலிய நிறுவனம்!

படம்
  சோலார் ஆற்றலை சேமிக்கும் புதிய வழி!  இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சோலார் ஆற்றலை சேமிக்க புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஆற்றலை, சோலார் பேனல்களின் மூலம் பகலில் சேமிக்கலாம், ஆனால், இரவில் ஆற்றலை சேகரிப்பது கடினமானது. தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது. இஸ்ரேலின் தெற்குப்பகுதியில், பாறைகளை உள்ளடக்கிய பாலைவனம் உள்ளது. இங்கு சோலார் பேனல்களை வைத்து மின்சாரத்தை தயாரிக்கின்றனர். நாட்டில் பயன்படும் பெரும்பான்மையான மின்சார ஆற்றல், இங்கிருந்தே பெறப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் ஆற்றல் தேவைக்கு, கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர்.  புதுப்பிக்கும் ஆற்றலை எளிதாக பெற்றாலும், அதனை சேமிக்க கூடுதலாக செலவழிக்கவேண்டியுள்ளது. இதனால் இதனைப் பலரும் பயன்படுத்த தயங்கி வருகின்றனர். கிப்புட்ஸ் யாஹெல் (kibbutz yahel) எனும் சிறு மக்கள் இனக்குழு, சோலார் ஆற்றலை குறைந்த விலையில் எளிதாக சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.  இவர்களால், இரவிலும் கூட ஆற்றலை சேமிக்க முடிவதுதான் இதன் சிறப்பம்சம்.  சோலார் பேனல்களில் பகல் நேரத்தில் கிடைக்கும் உபரி ஆற்றலை சேமிக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி நிலத

சிஇஎஸ் 2020 - கருவிகளில் என்ன புதுசு?

படம்
அமெரிக்காவில் சிஇஎஸ் விழாவில் ஏராளமான புதிய எலக்ட்ரிக் பொருட்கள் வெளியிடப்படும். அதில் சில அமேசிங்காக இருக்கும். சில ஐயையோ என்று சொல்ல வைக்கும். நமக்கு எதுவாக இருந்தாலும் அதில் புதுமையான கான்செப்ட் முக்கியம். அப்படி வியக்க வைத்த சில பொருட்கள் உங்களுக்காக.... காரில் கண் கூசாது ஜெர்மனி நிறுவனமான போச் நிறுவனத்தின் தயாரிப்பு. சாதாரணமாக சூரிய ஒளி கண்களில் ஏற்படுத்தும் கூச்சத்தைத் தவிர்க்க காரில் வசதிகள் உண்டு. அதனை டிஜிட்டலாக மாற்றியுள்ளனர். கண்கூசுவதைத் தடுக்கும் பொருள் இப்போது எல்சிடி திரையாக மாறியுள்ளது. இதில் உள்ள கேமரா சூரிய ஒளி நம் முகத்தில் படும் இடத்தை மட்டும் நிழலாக மாற்றி விபத்துகளிலிருந்து காக்கிறது. விழாவில் சோதித்தபோது கண்களில் நிழல் ஏற்பட சிறிது நேரம் தேவைப்பட்டது. செக்வே எஸ் பாட் பிக்சாரின் வால் இ படத்தில் காப்பியடித்து செய்தது போலவே இருக்கின்றன இந்த வாகனங்கள். எதிர்காலத்தில் விமானநிலையத்தில் உங்களை அழைத்துச்செல்லும் வண்டிகளாக இவை இருக்கலாம். பாட் செஃப் - சாம்சங் எதிர்காலம் தானியங்கி கருவிகள்தான் என சாம்சங் உறுதியாக உள்ளது. தற்போது தானியங்கி கருவி

காமெடி அறிவியல் விருதுகள் - எல்ஜி நோபல் பரிசு!

படம்
எல்ஜி நோபல் பரிசு! விநோதமான வித்தியாசமான யோசனைகள் சிந்தனைகள் அறிவியலுக்கு அவசியம். முன்பு என்ன இது, கிறுக்குத்தனமாக இருக்கிறதே என்று நினைத்த விஷயங்கள்பின்னாளில்  மகத்தான கண்டுபிடிப்புகளாக நிறைவேறியுள்ளன. அவற்றைக் கவனப்படுத்தி பரிசுகளை வழங்குகிறது எல்ஜி நோபல் கமிட்டி. அனாட்டமி விருது! ஆண்களின் விதைப்பையின் இடதுபுறம் ஏன் வலதுபுறத்தை விட சூடாக இருக்கிறது என்பதுதான் ஆராய்ச்சி. ஏண்டா இப்படி என்று கேட்டீர்கள் என்றால் உடனே கட்டுரையைவிட்டு வெளிநடப்பு செய்துவிடுங்கள். இதற்காக ஆய்வாளர் ரோஜர், போரஸ் எத்தனை பேரை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் தெரியுமா? தபால்காரர்களை 20-52 வயது வரை தேர்ந்தெடுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். சங்கோஜமாக இருக்காதா என்று கேட்காதீர்கள். நமக்கு ஆராய்ச்சிதான் முக்கியம். வேதியியல் விருது ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பை ஜொள் விட்டு உலகமே பார்த்தது. அப்போது அனைவரின் வாயில் வடித்த தோராய ஜொள்ளின் அளவு என்ன? ஆம். இதைதான் ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர். ஐந்து வயது சிறுவனின் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவு சதவீதத்தை இதன்மூலம் கணித்துள்ளனர்.