காமெடி அறிவியல் விருதுகள் - எல்ஜி நோபல் பரிசு!





Image result for ig nobel 2019





எல்ஜி நோபல் பரிசு!

விநோதமான வித்தியாசமான யோசனைகள் சிந்தனைகள் அறிவியலுக்கு அவசியம். முன்பு என்ன இது, கிறுக்குத்தனமாக இருக்கிறதே என்று நினைத்த விஷயங்கள்பின்னாளில்  மகத்தான கண்டுபிடிப்புகளாக நிறைவேறியுள்ளன. அவற்றைக் கவனப்படுத்தி பரிசுகளை வழங்குகிறது எல்ஜி நோபல் கமிட்டி.

அனாட்டமி விருது!

ஆண்களின் விதைப்பையின் இடதுபுறம் ஏன் வலதுபுறத்தை விட சூடாக இருக்கிறது என்பதுதான் ஆராய்ச்சி. ஏண்டா இப்படி என்று கேட்டீர்கள் என்றால் உடனே கட்டுரையைவிட்டு வெளிநடப்பு செய்துவிடுங்கள். இதற்காக ஆய்வாளர் ரோஜர், போரஸ் எத்தனை பேரை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் தெரியுமா? தபால்காரர்களை 20-52 வயது வரை தேர்ந்தெடுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். சங்கோஜமாக இருக்காதா என்று கேட்காதீர்கள். நமக்கு ஆராய்ச்சிதான் முக்கியம்.


வேதியியல் விருது

ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பை ஜொள் விட்டு உலகமே பார்த்தது. அப்போது அனைவரின் வாயில் வடித்த தோராய ஜொள்ளின் அளவு என்ன? ஆம். இதைதான் ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர். ஐந்து வயது சிறுவனின் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவு சதவீதத்தை இதன்மூலம் கணித்துள்ளனர்.


அமைதி பரிசு


சென்னையில் மோகன் மேன்சன் வகையறாக்களில் தங்கியவர்களுக்கு அந்த பிரச்னை உண்டு. அந்த இடங்களில் படர்தாமரை பிரச்னையை  அனைவரும் எதிர்கொண்டிருப்பார்கள். சொறிந்து சொறிந்தே சுகம் கண்டாலும் வைத்தியம் பார்க்காவிட்டால் உடல் முழுக்கப் பரவி, பேதி மாத்திரை சாப்பிடும் தண்டனைகள் இதற்கு கிடைக்கும். அரிப்பைத் தூண்டிவிட்டு அதனை எப்படி சொறிந்து அமைதிபடுத்துகிறோம் என்பதே அமைதிக்கான ஆராய்ச்சி. ஒருவகையில் அரிப்பு குறைந்து  அமைதியாகிறது அல்லவா?


உளவியல் பரிசு

பேனாவை உதட்டில் கவ்வி பிடித்தபடி சிரிக்கவேண்டும். முடியுமா? இது மகிழ்ச்சிக்கு காரணம் அல்ல என்று கண்டுபிடித்து உளவியல் பரிசைப் பெற்றிருக்கிறார் உர்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஃபிரிட்ஸ் ஸ்ட்ராக். இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா என்று கூறினால் எப்படி? 1998 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகிறார்  ஸ்ட்ராக்.


பொருளாதாரப் பரிசு!

பணம் பாக்கெட்டில் இருந்தால் நாம்தான் அனைவருக்கும் முதலாளி. பார்வை, பேச்சு எல்லாமே ரைட் ராயலாக மாறும். இந்த ஆராய்ச்சியும் அப்படித்தான். எந்த கரன்சியை கையில் பிடித்தால் அதிக பாக்டீரியாக்கள் இருக்கும் என்ற ஆராய்ச்சியை செய்தனர். இதில் ரோமானியா நாட்டு கரன்சி பரிசை வென்றிருக்கிறது. ஹபீப் கடிக், டிமோத்தி, ஆண்டிரெஸ் வோஸ் ஆகியோர் இதற்கான பரிசை வென்றுள்ளனர்.


பொறியியல் விருது.

உலகை மாற்றும் எந்திரங்கள் எல்லாம் கிடையாது. டிஸ்வாஷர் போல உள்ள இயந்திரம்தான் பரிசை வென்றது. விஷயம், குழந்தைகளின் டயாப்பரை மாற்றும் கருவி. குடும்பஸ்தர்கள் ஓட்டுப்போட்டு இமான் ஃபராபக்ஸ் என்பவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.



நன்றி - டைம்ஸ் - ஆஸ்ரே ஹரிகரன்