மருந்துகளும் தடைகளும்! - நோய் மருந்துகளுக்கு தடை!




Image result for doping test




விளையாட்டு உலகில் ஒருவர் தங்கம் வெல்வது முக்கியமானது. அதற்குப் பிறகு அவரின் உடலின் ரத்தம், சிறுநீர் சோதனை நடைபெறும். இதில்தான் வெற்றி பெறும் பல்வேறு வீர ர்களும் மாட்டிக்கொள்கின்றனர். இதில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அவர்கள் பயன்படுத்தினால் பதக்கம் பறிக்கப்படும். இரண்டாம் நிலையிலுள்ள வீரருக்கு அப்பதக்கம் வழங்கப்படும். இது பெரிய அவமானம். தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுகிறோம் என்பதே வீர ர்களுக்கு தெரிவதில்லை. காரணம் இதிலுள்ள நிறைய குழப்பங்கள்தான்.


டெஸ்டோஸ்ட்ரோன்

நமது உடலில் இயல்பாக சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்தான் இது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ட்ரோன் அதிகமாக சுரந்தால்தான் அவர்களின் உடல் எலும்புகள் வளர்ச்சி பெறும். தசைகள் வளர்ச்சி சீர் பெறும். இதனை விளையாட்டு வீர ர்கள் தம் எடையைக் கூட்ட தசைகளை வலிமைப்படுத்த பயன்படுத்துகின்றனர்.

எப்ஹெட்ரின்

ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்க பயன்படுத்தும் மருந்து. இதுவும் எடையை அதிகரிக்கவும், உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள்.

டையூரெட்டிக்ஸ்

சிறுநீரக கற்களைக் கரைக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படும் மருந்து.
குத்துச்சண்டை வீரர்கள், இம்மருந்தை தங்களின் உடல் எடையைக் குறைக்கப் பயன்படுத்துகின்றனர். இம்மருந்து தீவிரமாக வேலை செய்து உடலிலுள்ள நீரை சிறுநீராக வெளியேற்றும்.

பேட்டா பிளாக்கர்ஸ்

இதய அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு தீர்வு தருவதற்கான மருந்து. இம்மருந்து, உடலிலுள்ள நரம்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனைத் துப்பாக்கி சுடும் வீரர்கள், அம்பு எய்தும் வீரர்கள் தங்களது உடலின் நிலைப்புத் தன்மைக்காக பயன்படுத்துகின்றனர்.

டமாக்சிஃபைன்

டெஸ்டோஸ்ட்ரோன், ஈஸ்ட்ரோஜன் ஆகியவை உடலில் இயல்பாக சுரப்பவை. இதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்க டமாக்சிஃபைன் பயன்படுகிறது.

நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்








பிரபலமான இடுகைகள்