சிலர் பேசுவதை மட்டும் விரும்பிக் கேட்க காரணம் இதுதான்!




புத்தக விமர்சனம்

43212933


உளவியலும் உண்மையும்

நூல் ஆசிரியர், பல்வேறு கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் உளவியலாளராக பணியாற்றியுள்ளார். இதில் தான் சந்தித்த விஷயங்களைப் பற்றி ஆழமாக பேசுகிறார். தந்தைக்கு சிறுநீரகம் கெட்டுவிட, மகன் அவருக்கு சிறுநீரகத்தை தானம் தர முன்வருகிறார். சோதனையில் மகனுடைய சிறுநீரகம் பொருந்துகிறது. இதன் விளைவாக, அவருடைய உயிரியல் ரீதியான மகன் அவரில்லை என்ற உண்மையும் வெளிவருகிறது.இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர்.



43522604





செய்தி சொல் கிளியே!

சிலர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கிறோம். சிலர் சொல்ல வந்தால் வேறு பக்கம் கிளம்பி ஓடிவிடுகிறோம். அதற்கு என்ன காரணம்? அதைத்தான் இந்த நூல் கூறுகிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை பிரெக்ஸிட் முதற்கொண்டு எடுத்து வைத்து கூறுகிறார்கள். படித்து பார்த்து வாழ்க்கையில் முயற்சித்து பாருங்கள். உதவக்கூடும்.


43565368



பழக்கங்கள் எனும் சங்கிலி!

எப்படி பழக்கங்களுக்குள் நமது மனம் சிக்குகிறது? அதிலிருந்து வெளியே வருவது எப்படி? வாழ்க்கையை உருப்படியாக வாழச்செய்யும் பழக்கங்கள் எவை என ஆசிரியர் நம் கைபிடித்து வழிகாட்டுகிறார். முடிந்தால் நீங்களும் கடைபிடிக்கலாம்.


நன்றி: குட்ரீட்ஸ்