எலக்ட்ரிக் ஏரோபிளேன்கள் தேவையா?



Image result for vabor electric plane







இன்று உலகம் முழுக்க 20 ஆயிரம் பிளேன்கள் சுற்றி வருகின்றன. அதில் 300 கோடிப்பேருக்கும் மேல் பயணித்து வருகின்றனர். இதில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு 4 சதவீதம். 2040க்குள் இதன் அளவு கூடும் என சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

2016 ஆம் ஆண்டு சோலார் இம்பல்ஸ் எனும் விமானம் பேட்டரியில் இயங்கும்படி உருவானது. இதில் ஹைட்ரஜனைச் சேமித்து அதனை மின்திறனாக மாற்றினால் போதும். சாதாரண பேட்டரியை விட அதிக திறனோடு இயங்கும்.

மேலும் எலக்ட்ரிக் மோட்டாரை விமானத்தின் வால்புறம் வைத்தால் விமானத்தின் திறன் 85 சதவீதம் உயருமாம்.

1. தற்போது 800 கி.மீ. வரை பறக்கும் சிறியவகை எலக்ட்ரிக் விமானங்களுக்கான தேவை உள்ளது. இதில் பறக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆசைப்படுகின்றனர். சாதாரண விமானத்தில் பறக்க செலவிடும் எரிபொருளின் அளவு, இங்கிலாந்தில் அமெரிக்காவில் வீட்டை சூடாக்க ஓராண்டுக்கு செலவிடும் எரிபொருளின் அளவுக்குச் சமம்.

2. எலக்ட்ரிக் விமானத்திற்கான உருவாக்க முயற்சிகள் 1800 ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. நாசா அமைப்பு, டாம் நியூமன் என்பவரின் வேபர் எனும் மின் விமானத்திற்கு 2015 ஆம் ஆண்டு பரிசளித்துள்ளது.


3. எலக்ட்ரிக் விமானங்களில் பயணித்தால் காசு குறைவாக செலவழியும். சத்தமில்லாமல் செல்லலாம். 2022 இல் எலக்ட்ரிக் விமானப்பயணம் சாத்தியமாகலாம். விமானத்தின் அளவு என்பது இன்னும் குழப்பமாக உள்ளது. ஜெட் விமானத்தை விட 40 மடங்கு குறைவாகவே எரிபொருளை எலக்ட்ரிக் விமானம் செலவழிக்கிறது.

நன்றி- ஹவ் இட் வொர்க்ஸ்