உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட நாணயம்!






Image result for questions




டாப் 5 கேள்விகள் 

மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு? எப்படி?



காய்கறிகளை பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

பண்ணைக் காய்கறிகள் என்பதன் அர்த்தம், அதில் மண் ஒட்டியிருக்க சாப்பிடுவது அல்ல. அம்முறையில் சில சத்துகள் உண்டுதான். ஆனால் சத்துகள் உடலால் செரிக்கப்பட அவை சமைக்கப்படுவது அவசியம். மேலும் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் நேரடியாக சாப்பிட்டால் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது.

மெட்ரிக் அளவீட்டை ஏற்காத நாடுகளும் உண்டா?

ஏன் இல்லாமல்? அமெரிக்கா, மியான்மர், லைபீரியா ஆகிய நாடுகள் உலக மெட்ரிக் அளவீட்டை ஏற்கவில்லை. அமல்படுத்தவில்லை.

ஜப்பான் மன்னருக்கு பெரும் அதிகாரம் உண்டா?

இரண்டாம் உலகப்போர் தோல்வி வரை இருந்தது. அதற்குப் பிறகு மன்னர் என்பது மரியாதைக்குரிய அடையாளமாக மாறி விட்டது. பெரிய அதிகாரங்கள் ஏதுமில்லை.

செவ்விந்தியர்கள் கத்துவது போல படங்களில் நாம் கேட்கும் ஒலி உண்மையானதா?

சுத்த டுபாக்கூர். செரோக்கி மற்றும் அபாசே ஆகிய பழங்குடிகள் தமக்குள் போர் நேரும்போது சிலவகை ஒலிகளை தகவல் தொடர்புக்காக எழுப்புவார்கள். ஆனால் அது படத்தில் காட்டியுள்ளது போல் அல்ல. படத்தில் ஒரே மாதிரியான தவறான புரிதல் உள்ளது.

உலகிலேயே அதிக விலைமதிப்பு வாய்ந்த நாணயம் எது?

ஜார்ஜ் வாஷிங்டன் தானே பரிசோதித்த வெள்ளி நாணயம் அது. மதிப்பு பத்து மில்லியன் டாலர்கள்.


நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் 





பிரபலமான இடுகைகள்