உடல் எடை குறைப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? - அலசல்
உடல் எடை குறைப்பு உடல் எடையைக் குறைப்பது என்பது, மிகப்பெரிய வணிக சேவையாக மாறிவிட்டது. உண்மையில் உடலின் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதாக என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கூறவேண்டும். ஆனால் உடல் எடை குறைப்பது நிச்சயம் என ஏராளமான நூல்கள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. தமிழில் பா.ராகவன் எழுதியுள்ள பேலியோ டயட் இந்த வகையில் முக்கியமான நூல். ஒருவரின் உடல் எடையைக் குறைப்பதில் அவரது மரபணுக்களுக்கு முக்கியமான பங்குண்டு. எழுத்தாளர் பா.ராகவன், தனது பேலியோ டயட் அனுபவங்களை குங்குமத்தில் தொடராக எழுதினார். அதுதான் பின்னாளில் தொகுக்கப்பட்டு நூலானது. பாராவுக்கு, பேலியோ டயட் வேலை செய்தது என்றால் அதேபோல இன்னொருவருக்கு அப்படியே அதே முறையில் வேலை செய்யும் என்று கூறமுடியாது. உடல் மிக சிக்கலான இயந்திரம். குறிப்பிட்ட காலத்திற்கு டயட் முறை வேலை செய்யும்தான். ஆனால் பிறகு உடல் மீண்டும் தனது இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். என்ன பிரச்னை? உடல் எடை குறைப்பதில் ஒருவரின் அடிவயிற்றுக் கொழுப்பு மட்டுமே கரைகிறது என மேலோட்டமாக புரிந்துகொள்வது தவறு. நம்மில் பலருக்கும் உடல் எடை அதிகரிப்பது, உணவுப்பொருட்களை அதிகமாக...