வாசனையையும் சுவையையும் அறியும் சுவாரசிய சோதனை!
உணர்வுகளோடு விளையாடு!
தேவையான பொருட்கள்
வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை,மாதுளை, கண்களைக் கட்டும் துணி, நண்பர் ஒருவர்
செய்யவேண்டியது
1. மேற்குறிப்பிட்ட பழங்களில் இரண்டை(வாழைப்பழம், ஆப்பிள்) எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்றை முகர்ந்து பார்க்கவேண்டும். இன்னொரு உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இச்செயலை செய்யும்போது உங்கள் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். நண்பர் தான் உணவுப்பொருட்களை எடுத்துக் கொடுப்பார். தொடங்கலாமா?
2. உங்கள் நண்பரை அழைத்து கண்களை இறுக கட்டச்சொல்லிவிடுங்கள். அடுத்து அவர் ஒரு உணவுப்பொருளை (வாழைப்பழம்) உங்களுக்கு சாப்பிட கொடுக்கவேண்டும். அதேசமயம், இன்னொரு உணவுப்பொருளை (ஆப்பிள்) மூக்கில் அருகில் நீங்கள் அதனை வாசனையை அறியும்படி பிடிக்கவேண்டும்.
3. மூக்கால் உணரும் வாசனை, உண்ணும்போது உங்களுக்கு தெரிய வரும் உணவுப்பொருளின் சுவை இரண்டையும் நீங்கள் கூறவேண்டும். இச்சோதனைகளை உணவுப்பொருட்களை மாற்றி செய்யலாம்.
கற்பது இதைத்தான்!
பொதுவாக ஒருவருக்கு மூக்கால் முகரும் திறன் இல்லாதபோது பசி உணர்வு தூண்டப்படாது. தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வாசனைகளை உணரும் திறனை இழப்பதற்கு அனோஸ்மியா (Anosmia) என்று பெயர். இச்சோதனை மூலம் வாசனைகளைக் கண்டறியும் திறன் கூர்மையடைகிறது. உணவுப்பொருட்களின் வாசனை பசியை ஊக்குவிப்பதை அறிந்துகொண்டீர்கள்.
Future Genius
கருத்துகள்
கருத்துரையிடுக