பெண்களின் பாலியல் விழைவை மறுக்கும் சமூகம்! - கடிதங்கள் - கதிரவன்

 







21.12.2021

மயிலாப்பூர் 

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? 

நீங்கள் சென்னைக்கு வந்தாலும் கூட உங்களை என்னால் பார்க்க முடியவில்லை. வருத்தம்தான். என்ன செய்வது  நேரம் குறைவு. நல்லபடியாக ஊருக்குச் செல்லுங்கள். இன்னொரு நாள் சந்திப்போம். டிசம்பர் மாத குளிர் இரவிலேயே தொடங்கிவிடுகிறது. நான் காலை எட்டு மணிக்கே எழுந்து குளித்து சவரம் செய்துவிடுகிறேன். அதற்கு பிறகு நேரம் ஆனால், வட இந்திய ஆட்கள் கழிவறை, குளியலறையைக் கைப்பற்றி விடுவார்கள். மூன்றாவது மாடியில், வட இந்தியர்களோடு இப்போது நாங்கள் 9 பேர் தங்கியுள்ளோம். 

திருமண வயது சட்டம் பற்றி படித்துக்கொண்டு இருக்கிறேன். பெற்றோர்கள் 21 வயது வரை பிள்ளைக்கு பாதுகாவலர்களாக இருப்பார்கள். பெண்களின் பாலியல் தேர்வுகளை, விருப்பங்களை மறுத்தே சமூகம் உயிர்பிழைத்து வந்திருக்கிறது. பல்வேறு சட்டங்கள் வழியாக பாஜக அரசு தனது கருத்தியலை சமூகமெங்கும் பதித்து வருகிறது. நன்றி!

அன்பரசு 







23.12.2021

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன். புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள கோப்புகள் அழிந்துவிடும். ஃப்ரீதமிழ்புக்ஸ் சீனிவாசன் சார் செய்யும் உதவி இது. முன்னமே கூறியுள்ளது போல அவரின் தளத்திற்கு நிறைய நூல்களை இலவசமாக கொடுத்துள்ளேன். இதில் என்னுடைய சுயநலமும் உள்ளது. 

மூன்றாவது மாடியில் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. 14 பேருக்கு 2 கழிவறை 2 குளியலறை உள்ளது.  ஆட்களின் வரத்து கூடியதால், நான் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமையல் செய்வது குறைந்துவிட்டது. வயிற்றுக்கு பிரச்னை செய்யாத இடத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறேன். அலர்ஜி பாதிப்பு எப்போது வெளியே வருமோ? 

அன்பரசு 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்