மூளையைக் கூர்மையாக்கும் ரூபிக் க்யூப்!

மூளையை கூர்மையாக்கும் க்யூப்! 

ரூபிக் க்யூபைப் பயன்படுத்தி பிறரோடு சவால் விட்டு விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கலாம். இந்த விளையாட்டுப் பொருளை 1974ஆம் ஆண்டு, ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரைச் சேர்ந்த கட்டுமானத்துறை பேராசிரியரான  எர்னோ ரூபிக் (Erno Rubik) உருவாக்கினார். 

 1944 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி புதாபெஸ்டில் பிறந்தார் எர்னோ ரூபிக். சிறுவயதில் ஓவியம் வரைவது, சிற்பங்கள் செதுக்குவது ஆகியவற்றில் பேரார்வம் கொண்டிருந்தார். அதனால், புதாபெஸ்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தார். 

1974ஆம் ஆண்டு 29 ஆம் வயதில், மரத்தில் செய்த எட்டு க்யூப் வடிவங்களை ஒன்றாக்கி தற்போதைய க்யூப் வடிவத்தை உருவாக்கினார். அதற்கு வண்ணங்களைத் தீட்டி பரிசோதனை செய்து பார்த்தார். நம்பிக்கை பிறந்ததும் ஹங்கேரி நாட்டு காப்புரிமை அலுவலகத்தில் க்யூப்பை பதிவு செய்தார். 1977ஆம் ஆண்டு தொடங்கி க்யூப் ஹங்கேரியில் தயாரிக்கப்பட்டு விற்கப்படத் தொடங்கியது. 

ரூபிக் க்யூபை வேகமாக நகர்த்தி அனைத்து புறங்களிலும் ஒரே விதமான நிறங்களைக் கொண்டு வருவது என்பது கடினம். 2018ஆம் ஆண்டு க்யூபிக் புதிரை சீன நாட்டைச் சேர்ந்த யூசெங் டு(Yusheng Du) என்பவர் 3 நிமிடம் 47 நிமிடங்களில்  என்ற கால அளவில் நிறைவு செய்தது சாதனையாக உள்ளது. உலகம் முழுவதும் க்யூப்கள் 35 கோடி என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.  உலக க்யூப் சங்கம் (World Cube Association), ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட க்யூப் புதிர்ப்போட்டிகளை நடத்தி வருகிறது.  

Original article by

Readers digest 

July 2022

கருத்துகள்