புகையிலையை மேம்படுத்த உதவும் யூரியா? உண்மையா? உடான்ஸா?

 










புகையிலைப் பொருட்களை மேம்படுத்த யூரியா உதவுகிறது!


உண்மை. புகையிலையில் மனிதர்களின் சிறுநீரில் காணப்படும் யூரியா மூலக்கூறு, உரமாகப் பயன்படும் டைஅம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியா, ஃபார்மால்டிஹைடு, சாக்லெட் ஆகியவை உள்ளன.  இதனை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராபர்ட் புரோக்டர் ஆய்வில் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பும் (CDC) புகையிலையில் யூரியா பயன்படுவதை கண்டறிந்துள்ளது. 

2050இல் இந்தோனேஷியாவின் வடக்குப் பகுதி ஜகார்த்தா நகரம் நீரில் மூழ்கும்!


யூக உண்மை. வெப்பமயமாதல், சூழல் மாறுபாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இப்படி அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இந்தக் கூற்று நடக்கலாம். நடைபெறாமலும் போகலாம். கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் ஜகார்த்தா நகரம் உறுதியாக நீருக்கடியில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது.  2019ஆம் ஆண்டு வெளியான வயர் வலைத்தள கட்டுரையில், ஜகார்த்தா நகரம் ஆண்டுக்கு பத்து அங்குலம் நீரில் முழ்கி வருவதாக எழுதப்பட்டிருந்தது. 

வாழைப்பழத்தில் 500 வகைகள் உண்டு!


உண்மை. நகரத்தில் பெரும்பாலும் விற்பவர்களுக்கு மஞ்சளா, பச்சையா என்று மட்டும்தான் கேட்டு விற்கத் தெரியும். ஆனால் வாழையில் பூம்பழம், கற்பூரவள்ளி, பச்சை நாடன், மொந்தை என ஏராளமான வகைகள் உண்டு. அனைத்துமே சாப்பிடலாம்தான். ஆனாலும், செரிமானத்தை மனதில் கொண்டு வாழைப்பழத்தை தேர்வு செய்யுங்கள். அதனை, உணவிற்கு முன்னதாக சாப்பிடுவது சிறப்பு. 

கிச்சுகிச்சு மூட்டும்மோது ஏற்படும் சிரிப்பு, உடலின் தற்காப்பு நடவடிக்கை! 


உண்மை. உடலில் அக்குள், தொண்டைக்கு அருகில், பாதம் ஆகிய பகுதிகளில்  கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வரும்.  கிச்சுகிச்சு மூட்டல் செயல்பாடு, மூளையில் வலியுணர்வை ஏற்படுத்துகிறது. இதனை சமாளிக்கும் விதமாகவே சிரிப்பு உருவாகிறது என ஜெர்மனியின் டியூபின்ஜென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

தோலில் உள்ள சோமாடோசென்சரி கார்டெக்ஸ் (somatosensory cortex) மூளைக்கு கிச்சுகிச்சுமூட்டலை தெரிவிக்கிறது.  ஒருவருக்கு பிறர்தான் கிச்சுகிச்சு மூட்ட முடியும். இதனை ஒருவர் தனக்குத்தானே செய்துகொள்ள முடியாது. நம் மூளையின் பின்னாலுள்ள செரிபெல்லம் இதனைக் கண்டுபிடித்துவிடும். 

கடல் அலைகளின் வடிவத்தில் மேகங்கள் உருவாகும்!


உண்மை. குதிரை, சிங்கம், குழந்தை விளையாடுவது போன்ற வடிவங்களை மேகத்தில் சிலர் பார்த்திருக்கலாம். ஆனால் கடல் அலைகளைப் போல பார்ப்பது அரிது. ஆனால் இப்படி இருக்கும் மேகங்களை அமெரிக்காவில் பார்த்திருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு வர்ஜீனியாவில் உள்ள மக்கள் ஸ்மித் மலையின்  மேலே கடல் அலைகளைப் போன்ற மேகங்களைப் பார்த்திருக்கிறார்கள். இதற்கு, கெல்வின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் (Kelvin-Helmholtz clouds )என்று பெயர். மேகங்களில் மேற்புறத்தில் வேகமான காற்றும், கீழ்ப்புறத்தில் மெதுவான காற்றும் வீசுவதே இப்படிப்பட்ட கடல் அலை மேகங்கள் உருவாக காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 

 


https://www.yahoo.com/lifestyle/50-weird-facts-everything-181406932.html?guccounter=1

https://archives.drugabuse.gov/es/blog/post/what-is-in-cigarette-smoke 

https://www.wired.com/story/jakarta-is-sinking/

https://www.bbc.com/future/article/20140131-why-do-we-laugh-when-tickled

கருத்துகள்