பூமியில் உள்ள வேற்றுக்கிரகத்தீவைக் காண வாருங்கள்! சோகோட்ரா தீவு

 















பூமியில் ஓர் வேற்றுகிரகத் தீவு!




ஏமன் நாட்டுக்குச் சொந்தமான தீவு, சோகோட்ரா. 2008ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் தொன்மையான பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள தனித்துவமான தாவரங்கள், உயிரினங்களால் பூமியில் உள்ள வேற்றுகிரகம் என்ற செல்லப்பெயரும் இதற்குண்டு. 

அமைந்துள்ள இடம் : ஏமன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் 340 கி.மீ. தொலைவில் இந்தியக் கடலில் அமைந்துள்ளது. அரபிக்கடலுக்கும், கார்டாப்யூ சானல் நீரோட்டத்திற்கு இடையில்  உள்ளது. 3 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியாவிலிருந்து பிரிந்த தீவுப்பகுதி.

தீவுகளின் எண்ணிக்கை : 4 (சோகோத்ரா (Socotra), அப்ட் அல் குரி (Abd al kuri), சம்ஹா (Samhah), தர்ஷா (Darsha)) 

மொத்த பரப்பு: 3,796 சதுர கி.மீ. 

சோகோட்ரா பரப்பு: நீளம் 132 கி.மீ. அகலம் 49 கி.மீ. 

வெப்பநிலை: 25 டிகிரி செல்சியஸ்    

மழைப்பொழிவு அளவு 150 மி.மீ.

கண்டறிந்தவர்கள்: கிரேக்க, அராபிய கப்பல் மாலுமிகள்

மொத்த பறவை இனங்கள்:  225

அழியும் நிலையில் உள்ளவை: 6 (சோகோட்ரா ஸ்பாரோ (Socotra sparrow), சோகோட்ரா சிஸ்டிகோலா (Socotra Cisticola), சோகோட்ரா ஸ்டார்லிங் (Socotra Starling), சோகோட்ரா சன்பேர்ட் (Socotra Sunbird), சோகோட்ரா வார்ப்ளெர் (Socotra Warbler), சோகோட்ரா புன்டிங் (Socotra Bunting))

 பட்டாம்பூச்சி இனங்கள்: 190

பூச்சி இனங்கள்: 600

கடல் மீன் இனங்கள்: 730

தாவர இனங்களை முதன்முதலாக கண்டறிந்தவர்: 1880ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து தாவரவியலாளர் ஐசக்  பால்ஃபோர் (Isaac Balfour)

ஐசக் கண்டறிந்த தாவர இனங்கள்: 500 இதில் 200 இனங்கள் அதுவரை கண்டறியப்படாதவை.  

தற்போதுவரை அடையாளம் காணப்பட்ட தாவர இனங்கள்:  835. இதில் சோகோட்ரா தீவில் மட்டுமே வளருபவை, 308.   

பரவலாக உள்ள வேறுவகை  மர இனம்: போஸ்வெலியா (Boswellia) 

சிறப்பு: வாசனை கொண்ட பசை (Frankincense)

சோகோட்ரா தீவு மூன்று நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. 

1. கடல் சமவெளி (The coastal plains)

2. சுண்ணாம்புக்கல் பீடபூமி (The limestone plateau)

3. ஹாகெஹர் மலை (The Haggeher mountains)

கடல் சமவெளி 

8 கி.மீ. தொலைவுக்கு பரந்து விரிந்துள்ளது. இதன் தெற்குப் புறத்தில் நோஜெட் சமவெளி பரப்பு உள்ளது.

சுண்ணாம்புக்கல் பீடபூமி

சோகோட்ரா தீவின் மையத்தில் 700 மீட்டர் உயரத்தில் சுண்ணாம்புக் கல் பீடபூமி அமைந்துள்ளது. இங்கு நடைபாதை,  குகைகள், ஆழமற்ற பள்ளங்கள், பாறைகள் காணப்படுகின்றன.  

ஹாகெஹர் மலை

இங்குள்ள மலைச்சிகரங்கள்,  1,300 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் காணப்படுகின்றன. 

தீவின் அடையாளம் : டிராகன் ரத்த மரம் (Dragon Blood Tree)

டிராகன் ரத்த மரம்

அறிவியல் பெயர்:  டிராகனா சின்னபாரி (Dracaena cinnabari) 

வேறுபெயர்கள்: சோகோட்ரா டிராகன் மரம் (Socotra Dragon tree)

தாயகம்: ஏமன் சோகோட்ரா தீவு

சிறப்பு அம்சம்: நீர் ஆவியாதலைத் தடுக்கும் குடை அமைப்பு

பூக்களின் நிறம்: வெள்ளை மற்றும் பச்சை

மரத்தின் உயரம்: 10 மீட்டர் 

மரத்தின் செயல்பாடு: காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழ்கிறது. இதில் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலான பெர்ரி பழங்களை மக்கள் பண்ணை விலங்குகளுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதில் உருவாகும் பசைக்கு, எம்ஜோலோ (Emzoloh) என்று பெயர். டிராகன் மரத்திலிருந்து பெறும் சாயத்தை வயலின்களுக்கு (Stradivarius violin) பூச பயன்படுத்துகின்றனர்.

 மரத்தின் இலைகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உதிர்ந்து முளைக்கின்றன. பழங்களைத் தின்னும் பறவைகளின் எச்சம் மூலம் டிராகன் ரத்த மரம் பரவலாகிறது. மரம் 1 மீட்டர் வளர பத்து ஆண்டுகள் தேவைப்படுகிறது. 30 ஆண்டுகளில் மரம் முழு வளர்ச்சி அடைகிறது. 

அபாயம்:  காலநிலை மாற்றம் 

ஐயுசிஎன் பட்டியல்

பாதிக்கப்படும் நிலையில் உள்ளது (Vulnerable VU) 

மரம் பற்றிய வாய்வழிக்கதை: கெய்ன், ஆபல் என இரு சகோதர ர்கள் தீவில் வாழ்ந்து வந்தனர். அவர்களில் கெய்ன் தன் சகோதரன் ஆபலைக் கொன்றுவிட, ஆபலின் உடலில் பெருகிய அந்த ரத்தம் தான் டிராகன் பிளட் மரத்தை வினோதமாக வடிவத்தில் உருவாக்கியதாம். இதை பூமியின் முதல் கொலை என்று கூறுகின்றனர்.   


Reference

https://globaltrees.org/threatened-trees/trees/socotra-dragon-tree/

https://synerjies.com/the-tale-of-socotra-a-phenomenal-island-caught-in-geopolitical-crossfire/

https://draxe.com/nutrition/dragons-blood/

https://www.welcometosocotra.com/fauna-and-flora/

https://www.bibalex.org/SCIplanet/en/Article/Details?id=13628

https://www.konnecthq.com/dragon-blood-tree-fruit/

https://animals.sandiegozoo.org/plants/dragon-tree

 


கருத்துகள்