வறுமை ஒழிப்பு திட்டத்தில் அதிபர் ஷி ச்சின்பிங் சாதித்தது என்ன?
ஷி ச்சின்பிங்கின் வறுமை ஒழிப்பு ஷி ச்சின்பிங் கிராமப்புற வறுமை ஒழிப்பை தனது பேச்சுகளில், கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் நகர்ப்புற நிலைமைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நடுத்தர வருமானம் கொண்ட நாட்டின் தனிநபர் வருமானத்தை உயர்த்தவேண்டுமென கூறியவர் முன்னாள் அதிபர் டெங். பொருளாதார வளர்ச்சியின் வழியாக உலகளவிலான அந்தஸ்து, அங்கீகாரம் பெறுவதே நோக்கம். சீனாவில் தனிநபர் வருமானம் 2000ஆம் ஆண்டில் 500 தொடங்கி 4000 டாலர்கள் அளவில் பெருக வேண்டும் என்பது அவரது கனவு. இந்த வகையில் வறுமை நிலையில் இருந்து நாடு மேலெழுந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும் என்பது அவரது கனவு. ஆனால், டெங் எதிர்பார்த்ததை விட நாடு வேகமாக முன்னேறி வளர்ந்தது. ஆனால் இங்கே ஒரு பிரச்னை எழுந்தது. தாராளவாத பொருளாதாரம் , சர்வாதிகார நாடு என முரண்பாடுகள் உருவாகியது. இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. டெங்கிற்கு அடுத்து அதிபரானவர்களான ஜியாங் ஜெமின், ஹூ ஜின்டாவோ ஆகியோரும் சீனர்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்க முயன்றார்கள். அதற்கான இலக்குகளை நிர்ணயித்தனர். ஷி சீனா வளம் நிறைந்த நாடாக மாறுவது கடந்து வறுமை ஒழ...