சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல்

 

 





சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல்

சினா சங்
இயக்குநர், காகாவோ
தென்கொரியா

தென்கொரியாவில் இயங்கி வரும் காகாவோ ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனம், இசை, போக்குவரத்து, வெப் காமிக்ஸ், பணம் செலுத்தும் வசதி, குறுஞ்செய்தி என பலவற்றையும் ஒன்றாக இணைத்து காகாவோ டாக் என்ற ஆப் வழியாக வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக சினா பதவியேற்றது நடப்பாண்டு மார்ச் மாதம்தான். ஆப்பிற்கு பயனர்களாக 44 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இவருக்கு முன்னிருந்த தலைவரால் ஏற்பட்ட பங்கு சந்தை முறைகேடு பிரச்னையை சமாளித்து நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

டாபனி டெகாஜாரேன்விகுல்
தலைவர், இயக்குநர், பெர்லி ஜக்கர்
தாய்லாந்து

தினசரி பயன்பாட்டுப்பொருட்கள், உடல்நலம், பேக்கேஜிங் சார்ந்த துறைகளில் பெர்லி செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் டாபனி இயக்குநராக பொறுப்பேற்றார். டாபனியின் தந்தை சாரியோன் சிரிவதனபக்தி. பெரும் பணக்காரர். டாபனியின் கணவர் அஸ்வின், பெர்லியின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். அந்தப்பதவி இப்போது அவரது மனைவிக்கு வந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள பிக் சி எனும் பேரங்காடி கடைகளை பெர்லி ஜக்கர் நிறுவனமே நடத்துகிறது.

சோய் இயோன் ஹை
தலைவர், இயக்குநர், கோகாஸ்
தென்கொரியா

கோகாஸ், தென்கொரிய அரசு எரிவாயு நிறுவனம். உலகில் அதிகளவு திரவ எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிற நிறுவனங்களில் முக்கியமானது. அண்மையில், எரிபொருளின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டது. நாட்டின் தென்பகுதியில் எரிவாயு கண்டறியப்பட்டதால், பங்குச்சந்தையில் கோகாஸின் பங்கு மதிப்பு இரட்டை மதிப்பைத் தொட்டுள்ளது. சோய், இதற்கு முன்னர் கொரியன் கேஸ் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றியவர்.

மார்த்தா சாசோன்
அதிபர், இயக்குநர், ஜிகேஷ்
பிலிப்பைன்ஸ்

அம்மணி நடத்தும் பணப்பரிமாற்ற ஆப்பைத்தான் பிலிப்பைன்ஸில் உள்ள 94 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப் மூலம் வங்கிக்கடனே வாங்க முடியும். அண்மையில் ஆப்பிற்கு ஐந்து பில்லியன் டாலர்கள் முதலீடு கிடைத்துள்ளது. இந்த முதலீட்டை ஜப்பானிய கடன் நிறுவனமான எம்யுஎப்ஜி வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஜி கேஷ் தாய் நிறுவனமான மின்ட் விரைவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவிருக்கிறது.

கிறிஸ்டைன் சூ
சீனா பிரிவு தலைவர், நோவோ நார்டிஸ்க்
சீனா
சூ தனது தொழில்வாழ்க்கையை மருத்துவராக தொடங்கியவர். எலி லில்லி என்ற நிறுவனத்தில் வேலை செய்தார். பிறகு அதன் போட்டி நிறுவனமான நோவோவுக்கு 2018இல் மாறினார். சீனாவில் நோவோவுக்கு நல்ல மதிப்பும் வருமானமும் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும். 2.4 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. மருந்து உற்பத்திக்காக 560 மில்லியன் டாலர்களை முதலீடாக செய்ய உள்ளது. விரைவில் உடல் எடையை குறைப்பதற்கான ஊசிமருந்தை சந்தைப்படுத்தவிருக்கிறது.

குவோக் ஹூய் க்வோங்
தலைவர், சாங்கிரி லா குழுமம்
ஹாங்காங்

மலேசிய பணக்காரர் ராபர்ட் குவோக்கின் மகள், க்வோங். ஹாங்காங்கில் இவர், ஹோட்டல் வணிகத்தை செய்து வருகிறார். 105 ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இதன் மதிப்பு, 2.2 பில்லியன் டாலர்களாகும். குழுமத்தில் 2014ஆம் ஆண்டு நுழைந்தவர். 2017ஆம் ஆண்டில் குழும தலைவரானார். பெருந்தொற்று காரணமாக தொழிலில் இழப்பு ஏற்பட்டு இப்போது மெல்ல மீண்டு வருகிறது. கடந்த  ஆண்டில் 184.1 மில்லியன் டாலர்களை வருமானமாக பெற்றுள்ளது சாங்கிரி குழுமம். மெல்ல லாபம் பெற்று முன்னேறி வருகிறது.

சோனியா செங்
இயக்குநர், ரோஸ்வுட் ஹோட்டல் குழுமம்
ஹாங்காங்

இருபத்தெட்டு வயதில் குழுமத்தின் வணிகத்தில் பங்கேற்றார். பணக்கார தொழிலதிபர் செங் யு டுங்கின் பேத்தி. ஹார்வர்டில் படித்தவரான சோனியா, அமெரிக்க நிறுவனமான ரோஸ்வுட் ஹோட்டலை கையகப்படுத்தி இருபத்து மூன்று நாடுகளில் ஐம்பத்தி ஒன்று ஹோட்டல்களை நடத்தி வருகிறார். நாற்பத்தி எட்டு அதிநவீன சொகுசு ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், தனி கிளப்புகளும் உருவாக்கி லாபம் பார்த்து வருகிறார். 2022ஆம் ஆண்டு சோ டாய் ஃபுக் என்ற நகைக்கடை நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம், 95 ஆண்டுகளாக நகை வணிகத்தில் உள்ளது. செங், வரலாற்று பாரம்பரியம் கொண்ட நகை நிறுவனத்தை மீண்டும் விளம்பரப்படுத்தி லாபத்தை அதிகரிக்க முயன்று வருகிறார்.கடந்த ஆண்டில் நகை நிறுவன வருமானம் 13.9 மில்லியன் டாலர்களாக உள்ளது. நாடெங்கும் எட்டாயிரம் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ஏஞ்சலா டாங்
பொது மேலாளர், சீனபிரிவு, நைக்
சீனா
நடப்பு ஆண்டில் சீனாவில் இருந்து நைக் நிறுவனத்திற்கு பதினைந்து சதவீத வருமானம் கிடைத்து உள்ளது. உலகில் இரண்டாவது பெரிய சந்தையாக சீனா உள்ளது. லூலுலெமன், லி நிங் ஆகிய நிறுவனங்களின் போட்டியை சமாளித்து நைக் வெற்றிபெற ஏஞ்சலா உதவியிருக்கிறார். இவர் இந்த வேலைக்கு முன்னதாக பி அண்ட் ஜி, கொக்ககோலா ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2022ஆம் ஆண்டை விட வருமானத்தில் முன்னேற்றம் உள்ளது. இருந்தாலும் ஏஞ்சலா ஷாங்காயில் ஆய்வுக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். சீனாவில் உள்ள வீரர்கள், மக்களுக்கென தனித்துவமாக காலணிகளை நைக் விரைவில் உருவாக்கவிருக்கிறது.

கிறிஸ்டினா சூ
தலைவர், இயக்குநர் வால்மார்ட் சீனா
சீனா

2020ஆம் ஆண்டு கிறிஸ்டினா, வால்மார்ட் சீனாவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். பால் உற்பத்தி நிறுவனமான ஃபான்டெரா, மெக்கின்சி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நடப்பு ஆண்டில் நிறுவனத்தின் வருமானத்தை பதினேழு பில்லியன் டாலர்களாக உயர்த்திக் காட்டியுள்ளார். அண்மையில் ஜேடி.காம் நிறுவனத்தின் 3.7 பில்லியன் டாலர் பங்குகளை வால்மார்ட் விற்றுவிட்டது. சாம்ஸ் கிளப் என்ற உறுப்பினர் அட்டை கொண்ட நிறுவனமும் வளர்ச்சி பெற்றுவருகிறது. எதிர்காலத்தில் சீனாவில் வால்மார்டிற்கு கிடைக்கும் வருமானம் பாதி டிஜிட்டல் பிரிவில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஷா லியுங்
கியூமிங் வென்ச்சர் பார்ட்னர்ஸ்
ஹாங்காங்

உலகிலேயே சீனா உடல்நலம் சார்ந்த பொருட்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது. ஸ்டான்போர்டில் எம்பிஏ படித்தவரான நிஷா, 220 ஸ்டார்ட்அப்களை ஆதரித்து ஊக்கப்படுத்தி வருகிறார். கான் அண்ட் லீ பார்மசூட்டிகல்ஸ், கான்சினோ பயாலஜிஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

ஜென்னி லீ
நிர்வாக கூட்டாளி, கிரானைட் ஆசியா
சிங்கப்பூர்

ஜிஜிவி கேபிடல் நிறுவனம், அலிபாபா, தீதி, கிராப், ஷியாமி என பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவில் முதலீட்டு நிறுவனம், சீன நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதற்கு எதிர்ப்பு உருவானது. எனவே, ஜிஜிவி நிறுவனம், ஆசிய முதலீடுகளுக்கு என தனியாக கிரானைட் ஆசியா என தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் முதலீடுகளைக் கடந்து கடன்களை வழங்கவும் தொடங்கியுள்ளது.

சூ குயின்ஃபெய்
தலைவர், லென்ஸ் டெக்னாலஜி
சீனா

ஐபோனுக்கான டச் ஸ்க்ரீன்களை தயாரித்து வழங்கி பெரும் பணம் சம்பாதித்த நிறுவனம். பள்ளிக்கு சென்றவர், திடீரென படிப்பை நிறுத்திவிட்டு கடிகார லென்ஸ் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். லென்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை 2003ஆம் ஆண்டு தொடங்கினார். கணினி, ஸ்மார்ட் வாட்சுகள், மின் வாகனங்களை மெல்ல நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டில் 7.7 பில்லியன் டாலர்களை வருமானமாக சம்பாதித்த நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாளர்களாக உள்ளனர்.

டயானா சீசர்
தலைவர், ஹாங்செங் பேங்
ஹாங்காங்

ஹெச்எஸ்பிசி வங்கியின் துணை நிறுவனம்தான் ஹாங்செங் வங்கி. சிட்டி வங்கி, அமெரிக்க எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறார். பிறகு, 1999ஆம் ஆண்டு ஹெச்எஸ்பிசி வங்கியில் பணியில் இணைந்தார். கிரடிட் கார்டு வணிகத்தை சீரமைத்து லாபத்திற்கு கொண்டு வந்தார். ஹாங்செங் வங்கியில் எழுபது சதவீதம் பெண்கள்தான் போர்டில் செயல்பட்டு வருகின்றனர். 2021ஆம் ஆண்டு வங்கியின் தலைவராக உள்ளே வந்தார். அந்த வங்கியில் தலைவர் என்பது பெரும்பாலும் பெண்கள்தான். இப்போது டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்.   

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://fortune.com/asia/ranking/most-powerful-women-asia/2024/diana-cesar/&ved=2ahUKEwjPkJWW6pqJAxUrxQIHHWvzJ1wQh-wKegQIFBAC&usg=AOvVaw1JZ8rbzrgjWoCfrEypfDIs

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்