யானைகள் கணக்கெடுப்பு - தள்ளிப்போகும் காரணம்!

 

 

 

 



 

 

 

 2022-23ஆம் ஆண்டுக்கான யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த ஆண்டு வெளியிடப்படக்கூடும்.

இப்போது, ஊடகங்களில் அரசின் அறிக்கையில் உள்ள தகவல்கள் மெல்ல வெளியே வந்துள்ளன. அதுவும் சூழலுக்கோ, நமக்கோ நல்ல செய்தியை சொல்வதாக இல்லை. கிழக்கு, மத்திய, தென் பகுதி இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. மேற்குவங்கம் - தெற்கு 84 %, ஜார்க்கண்ட் 64%, ஒடிஷா 54%, கேரளம் 51% என யானைகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

வளர்ச்சி திட்டங்கள், சுரங்கம் தோண்டுவது, கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவையே யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வர காரணம். யானைகளின் எண்ணிக்கையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வருகின்றனர். தொண்ணூறுகளில் இருந்து இந்த செயல்பாடு நிற்காமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

புதிய கணக்கிடும் முறையாக டிஎன்ஏ ஆவணப்படுத்துதல் பயன்படுகிறது. இந்த முறையில் கணக்கீடு மட்டுமே செய்யப்படுகிறது. வேறு எந்த ஆலோசனைகளும் கூறப்படுவதில்லை. 2002ஆம் ஆண்டு வரை நேரடியாக யானைகளைப் பார்த்து கணக்கீடு செய்வது நடைமுறையில் இருந்தது. பின்னர், இம்முறை பெரிய பரப்பளவு கொண்ட இடத்தைக் கணக்கிட உதவாது என புதிய முறைக்கு மாறினர். யானையின் சாணத்தை அடிப்படையாக கொண்டு அவற்றைக் கணக்கிடுவதும் கூட நடைமுறையில் இருந்தது.

கணக்கிடும் ஆய்வுக்காக யானை, புலிகளை பொறி ஒன்றை உருவாக்கி அதன் வழியாக பிடித்து வைத்து சோதித்துவிட்டு காட்டில் விட்டுவிடுகிறார்கள். இது குறிப்பிட்ட பரப்பளவு கொண்ட இடத்தில் செய்யப்படுகிறது. யானை, புலி ஆகியவை பழைய அளவீட்டு முறை வாயிலாக பொறி அமைத்து பிடித்து குறியீடு செய்து விடுவித்து எண்ணிக்கை அறியப்படுகிறது. புலிகளின் உடலில் உள்ள வரிகளை வைத்து கணிக்கிறார்கள். புகைப்படம் எடுத்துவிட்டு விட்டுவிடுகிறார்கள். அருணாச்சலப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் அதிகமாக யானைகள் மறைந்துவிட்டன. ஒன்றிய அரசு, முழுமையாக தகவல் அறிக்கையை வெளியிட்டால் அதன் சூழல் செயல்பாட்டிற்கு விமர்சனங்கள் எழும் என்பதால், அறிக்கையை தள்ளிப்போடுகிறார்கள் என சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அறிக்கையை தள்ளிப்போட்டு வெளியிடுவது அரசியலுக்கு உகந்ததாக இருக்கலாம். உண்மைகளை மறைத்து வாக்குகளைப் பெறலாம். ஆனால், காடுகளில் வாழ்ந்த யானைகளின் மறைவை இறுதியாக தடுக்க முடியாமலேயே கூட போய்விடலாம்.

ஐஇ

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்