சீனாவில் உள்ள சிறந்த சுற்றுலா கிராமங்கள்!

 

 

 






சிறந்த சுற்றுலா கிராமங்கள் - சீனா
ஷிதி

அன்ஹூய் என்ற பகுதியில் ஹூவாங்சன் என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் 970 ஆண்டுகள் பழமையானது. 2000ஆவது ஆண்டில் யுனெஸ்கோ பாரம்பரிய இடம் என்ற பட்டியலில் இடம்பிடித்தது. ஹூய்சு கலாசார அடையாளம் கொண்ட கோவில்கள், கட்டுமானங்கள் கிராமத்தில் காணப்படுகின்றன. இவை வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொண்டவை.

யுகுன் கிராமம்

ஸெஜாங் என்ற மாகாணத்தில் அன்ஜி என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றதால் மாசுபாடு அடைந்து உள்ளூர் நிர்வாகத்தால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அழகிய நீர்நிலைகள், மலைத்தொடர்களைக் கொண்ட இடம்.

ஹூவாங்லிங் கிராமம்

வூயுவான் என்ற இடத்தில், ஜியாங்ஸி மாகாணத்தில் அமைந்துள்ளது. சமவெளியில் இருந்து 1,260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி கிராமம். இங்குள்ள மக்கள் மூங்கில்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தினசரி பயன்பாட்டுப் பொருட்களை மூங்கிலில் உருவாக்கி வருகிறார்கள். வரலாற்று ரீதியாக அறுநூறு ஆண்டுகள் பழமையானது. இங்கு செய்யப்படும் வேளாண்மை முறையும் தனித்துவமானது.

ஸக்கானா கிராமம்

கல் பெட்டி என திபெத்திய மொழியில் கிராமத்தின் பெயருக்கு அர்த்தம் வருகிறது. கான்சு என்ற மாகாணத்தில் கன்னான் என்ற சுயாட்சி பகுதியில் கிராமம் உள்ளது. 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கிராமம். மலைத்தொடர், காடுகள், ஏரிகள், புல்வெளி, கல் சுவர்கள் என பல்வேறு விதமான நிலப்பரப்புகளை ரசிக்கலாம். கல் சுவர்களின் பரவலான பார்வைக்காகவே கல் மாளிகை என்றும் கூட கிராமத்தைக் கூறுகிறார்கள்.

சூஜியாவன் கிராமம்

ஷாங்க்ஸி மாகாணத்தில் ஸசுசி கவுன்டியில் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள விலங்குகள், தாவரங்கள் செடிகள் முக்கியமானவை. அவற்றை கலாசார செல்வங்கள் என்று அழைக்கிறார்கள். மலைப்பகுதி வீடுகள் தொன்மையானவை.

ஷியாஜியாங் கிராமம்

சுனான் கவுன்டியில் உள்ள மலைப்பகுதி கிராமம். எண்ணூறு ஆண்டுகள் பழமையான கட்டுமானங்களைக் கொண்டது.

ஜியாங்சூ கிராமம்

இந்த கிராமம், சாங்குயிங் என்ற மாகாணத்தில் அமைந்துள்ளது. காடு, புல்வெளி, பள்ளத்தாக்குகளைக் கொண்டது. தொன்மையான நாடக கலைகள், மூங்கிலை அடிப்படையாக கொண்ட பொருட்கள்,மெழுகு அச்சிடல் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல்வேறு விஷயங்கள் உண்டு.

டாஸாய் கிராமம்
நெற்பயிர் விளைச்சலுக்கு பெயர் போன கிராமம். குவாங்ஷி சுவாங் என்ற சுயாட்சி பகுதியில் கிராமம் அமைந்துள்ளது.

சீனா டெய்லி
xidi village,yucun village zhujiawan village,zhagana village

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்