புதுயுக தலைவர்கள் - எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டுமானங்கள்
next generation leaders -time
அரைன் ஆப்ராமியன்
கட்டுமானக் கலைஞர்
லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் உள்ள கட்டுமானக் கலைஞர். ஆர்மேனிய இனத்தைச் சேர்ந்தவரான இவர், பெய்ரூட்டின் கிழக்குப்பகுதியில் தங்கி வாழ்ந்தபோது வீடுகள் குறுகியதாக இருந்தன. வசிக்கவே இடமில்லாதபோது விளையாட இடம் எங்கு கிடைக்கப்போகிறது? அரைன் குடும்பமாக தங்கியிருந்த இடத்தில், பூங்காக்களோ, விளையாட்டு மைதானமோ ஏதுமில்லை. இதுவே அவர் பின்னாளில் உருவாக்கிய கட்டுமானங்களில் திறந்தவெளிகள் அதிகம் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
அரைனின் அம்மாவுக்கு அறிவியல் திரைப்படங்கள் என்றால் அந்தளவு இஷ்டமாம். எனவே, அனிமேஷன், எழுத்துகள், ஓவியங்கள் என பலவற்றிலிருந்து கட்டுமான கலைக்கான ஐடியாக்களை பிடித்து வருகிறார். அரைனின் கட்டுமானங்களில் உள்ள சிறப்பம்சம், அவை எதிர்காலத்திற்கான சிக்கல்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவை என்பதுதான். ஒருமுறை சகாரா பாலைவனத்தில் அருகில் உள்ள குளம் ஒன்றில் உள்ள உப்பு, களிமண், கனிமங்கள் கொண்டே கட்டுமானம் ஒன்றை உருவாக்கித் தர கூறியிருக்கிறார்கள். அதையும் செய்து சாதித்திருக்கிறார்.
ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டுமானங்களில் மாறுதல்களை செய்து அதை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றுவதே அரைனின் சாமர்த்தியம். அதையே இன்று தொழிலாகவும் செய்து வருகிறார்.
https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DDGRzM0lTkzY&psig=AOvVaw1rM2tkRBLhdbx2uRxG2XW4&ust=1729518733520000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBcQjhxqFwoTCJjR0cKNnYkDFQAAAAAdAAAAABAR
கருத்துகள்
கருத்துரையிடுக