அமெரிக்காவில் வழங்கப்பட்ட முதல் காப்புரிமை!

 

 

 





அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி

அறிவியல், தொழில்நுட்பம் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

அறிவியல், தொழில்நுட்பம் என இரண்டுமே தொடர்புடையது என்றாலும் இலக்குகள் வேறுபட்டவை. இயற்கை உலகின் அடிப்படை அறிவைப் பெறுவதே அறிவியலின் இறுதி லட்சியம். அறிவியலை விளக்குவதற்காக ஆராய்ச்சி, கொள்கை, விதிகள், சமன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இதன் வழியாக இயற்கை உலகை அனைத்து மக்களும் புரிந்துகொள்கிறார்கள். தூய அறிவியல் என அழைக்கும் இத்துறையில் படிக்கும் ஆட்களே குறைந்து வருகிறார்கள். தொழில்நுட்பம் என்பது இயற்கை உலகில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கானது. இதன் அடிப்படை நோக்கம், மனித குலத்தை மேம்படுத்துவது, சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவை மட்டுமே. இந்த தொழில்நுட்பத்திற்கு அறிவியலின் கொள்கை, விதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

டபுள் பிளைண்ட் ஸ்டடி என்றால் என்ன?

ஒரு ஆய்வில் பங்கேற்பவர்கள், அதை நடத்துபவர்கள் ஆகியோருக்கு ஆய்வு பற்றி முக்கியமான அம்சங்கள் தெரியாமல் இருப்பது எனலாம். இந்த வகையில், ஆய்வு பாகுபாடு இன்றி, போலித்தனமாக இல்லாமல் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அறிவியல் கொள்கை, விதிகள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன?

அறிவியல் கொள்கை, கோட்பாட்டில் விதிகள் கூறப்படும். ஆனால் அறிவியல் கொள்கை என்பது எப்போது விதியாக, நெறியாக மாறாது, இயற்கை எப்படி எதிர்வினை ஆற்றுகிறது, ஒவ்வொரு முறை சோதிக்கும்போதும் சரியாக இருப்பதை அறிவியல் விதி என வரையறுத்து கூறலாம். அறிவியல் கொள்கை என்பது ஆய்வு செய்து அதில், கவனித்து பெறப்பட்ட முடிவில் உருவாக்கப்படுகிறது.

அமெரிக்காவில் முதல் காப்புரிமை எப்போது வழங்கப்பட்டது?

1790ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அறிவியலாளர் சாமுவேல் ஹாப்கின்ஸ் என்பவருக்கு காப்புரிமை வழங்கப்பட்டது. பொட்டாஷ் என்ற தூய்மை செய்யும் சூத்திரத்தின் கண்டுபிடிப்புக்காக  வழங்கினர். கண்ணாடி தயாரிப்பு, துணிகளை சாயமிடுவது, சோப்பு தயாரிப்பதில் சாமுவேலின் கண்டுபிடிப்பு முக்கிய பங்காற்றுகிறது.


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்