சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

 

 

 











 

 

 சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

அன்னா ஸே
தலைவர், பெப்சிகோ சீனா
சீனா
anne tse
pepcico china

2010ஆம் ஆண்டு பெப்சிகோவில் இணைந்ந அன்னா, 2021ஆம் ஆண்டு அதன் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். 2023ஆம் ஆண்டு குளிர்பான நிறுவனம், 2.7 பில்லியன் டாலர்களை வருமானமாக பெற்றிருக்கிறது. சந்தையைப் பொறுத்தவரை சீனா, பெப்சிகோவின் ஐந்தாவது பெரிய சந்தை. உள்ளூரில் பத்தாவது தொழிற்சாலையை உருவாக்கி 180 மில்லியன் டாலர்களை இலக்காக வைத்திருக்கிறார்கள்ம. பசுமை இல்ல வாயுவை தவிர்த்து உற்பத்தியை மேற்கொள்ள பெப்சிகோ இலக்கு வகுத்துள்ளது.

என்குயன் திபுவோங் தாவோ
தலைவர், விietஜெட் ஏவியேஷன்
வியட்நாம்
nguyen thi phuong thao
vietjet aviation

நாட்டின் முதல் தனியார் விமானசேவை நிறுவனம். அதை தொடங்கி அதன் தலைவராக இருக்கிறார் தாவோ. 2011ஆம் ஆண்டு விமான சேவையைத் தொடங்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இயக்கி வருகிறார். விலை குறைந்த விமானசேவை. கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25.3 மில்லியனாக எகிறியது. அரசு விமான சேவையில் பயனர்களின் எண்ணிக்கை 24.1 மில்லியன்தான். உலகளவில் 7.6 மில்லியன் வாடிக்கையாளர்களை இழுத்துள்ளது. வியட்னாமின் பெருமைக்குரிய பெண் தொழிலதிபர்களின் தாவோ முன்னிலை பெறுகிறார்.

லோரெலி குயாம்போ ஒசியல்
தலைவர், இயக்குநர் - ஷெல் பிலிபினாஸ்
பிலிப்பைன்ஸ்
lorelie quiambao osial
shell pilipinas

இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ் கிளையை பெண் தலைவர் நிர்வாகம் செய்வது அதன் 110 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நடக்கிற நிகழ்ச்சி. ஒசியல், இதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகம், இராக் ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார். 2021ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் கிளைக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். உலகளவிலான நிதி செயல்பாடுகளுக்கு ஷெல் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்து உதவி வருகிறார்.

டோரிஸ் சு
தலைவர், இயக்குநர் குளோபல் வேபர்ஸ்
தைவான்
doris hsu
globalwafers

செமி கண்டக்டர்களுக்கு உதவும் சிலிகான் வேபர்களை தயாரித்து வருகிறார். 2011ஆம் ஆண்டிலிருந்து நிறுவனம் இயங்கி வருகிறது. 2015ஆம் ஆண்டு குளோபல் வேபர்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இன்று உலகிலுள்ள இருபத்தைந்து செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கு சேவையை வழங்கி வருகிறது.

என்குயென் டக் தாச் தியம்
இயக்குநர், துணை தலைவர்
சாகோம் வங்கி
வியட்நாம்
nguyen duc thach diem
sacombank
2002ஆம் ஆண்டு சாகோம் வங்கியில் இணைந்தவர், ஏழாண்டு சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அந்த செயல்பாடுகள் இந்த ஆண்டு இறுதியோடு நிறைவுக்கு வருகின்றன. கடன் பிரச்னையில் சிக்கி 27 பில்லியன் சொத்து மதிப்பை அடைந்துள்ளது.

சடாடிப் சுட்ராகுல்
இயக்குநர், சியாம்பிவாட் குழுமம்
chadatip chutrakul
siam piwat group

2009ஆம் ஆண்டு தந்தை இறந்தபிறகு சில்லறை வணிகத்தை சுட்ராகுல் ஏற்று நடத்தி வருகிறார். 1996ஆம் ஆண்டு, சியாம் பிவாட் நிறுவனம், தாய்லாந்தின் முதல் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலைக் கட்டியது. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு உணவகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள், வணிக மால்கள் என பெரிதாக வளர்ந்துள்ளது. வணிக மால்களை கட்டுவது சுட்ராகுல்லின் தலைமைத்துவத்தில் அதிகரித்து வருகிறது.

லிண்டா சென்
தலைவர், வின் மக்காவு
linda chen
wynn macau

வின் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் ஆசியா பிரிவு நிறுவனங்களை வின் மக்காவு நிறுவனம் கவனித்துக்கொள்கிறது. அதன் தலைவர் லிண்டா. இந்த நிறுவனத்திற்கு போட்டியாளரான எம்ஜிஎம் ரிசார்ட்ஸ் உள்ளது. சூதாட்ட தொழில் வட்டாரத்தில் லிண்டாவுக்கு முப்பது ஆண்டு கால அனுபவம் உள்ளது. கடந்த ஆண்டில் வருமானமாக 3.1 பில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளது. ஏறத்தாழ அமெரிக்கா நிறுவனத்தின் வருமானத்தில் பாதியை லிண்டா ஈட்டியிருக்கிறார். சுற்றுலா பயணிகளுக்கான இடமாக வின் மக்காவு மாறிவருகிறது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்