எந்தெந்த பிளாஸ்டிக்குகளை எப்படி மறுசுழற்சி செய்வது?
மறுசுழற்சி பிளாஸ்டிக் பாலிமர்கள் நீளமான சங்கிலி பிணைப்புகளாலான மூலக்கூறுகளைக் கொண்டவை. கார்பன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களின் கீழே என்ன வகையான பிளாஸ்டிக் என்று எண்களால் குறிப்பிடப்பட்டிருக்கும். பெட் (PET) - பாலி எத்திலீன் டெரா பைத்தலேட் (Polyethylene Teraphthalate) பாட்டில், உணவு ஜார்கள், உடை, கார்பெட்டுகள், ஷாம்பு, மௌத்வாஷ் பாட்டில்கள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இவற்றை அடையாளப்படுத்தும் எண் 1. ஹெச்டிபிஇ (HDPE) - ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன் (High density polyethylene) சலவைத் திரவ பாட்டில்கள், நொறுக்குத்தீனி பெட்டிகள், பால் குடுவைகள், பொம்மைகள், வாளி, செடிவளர்க்கும் தொட்டிகள், குப்பைத்தொட்டிகள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண் 2. பிவிசி (PVC) - பாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride) கடன் அட்டைகள், ஜன்னல், கதவு பிரேம்கள், குழாய்கள், செயற்கை தோல். இவற்றை மறுசுழற்சி செய்வது மிக கடினம். இதன் அடையாள எண் 3. எல்டிபிஇ (LDPE) - லோ டென்ஸிட்டி பாலி எத்திலீன் (Low Density Polyethylene) பேக்கேஜ் ஃபிலிம், பேக்குகள், பபிள்ரேப், நெகிழ்வுத் த