இடுகைகள்

ஊக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசிப்பது மனநிறைவைத் தருகிறது - காந்திராமன் கடிதங்கள்

படம்
  ஊக்கம் மின்னல் 23/10/2022 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த இங்க் பென்னில் எழுத. புத்தக வாசிப்பு உங்களை நலமாக வாழ வைக்கும் என நம்புகிறேன். ஆத்ம தூய்மைக்காக நீங்கள் எழுதும் புத்தகங்களுக்கு எனது வாழ்த்துகள். முந்தைய நாள், சிவராமன் சாரிடம் பேசியதாக உங்களிடம் சொன்னேன். உங்களையும், அவரையும் தவிர என்னை யாரும் அதிகம் ஊக்கப்படுத்தியதில்லை. நான் மாணவர் இதழில் இத்தனை நாட்கள் வேலை செய்ய நீங்கள் இருவருமே காரணமாக இருப்பீர்கள் என உணர்கிறேன். அன்று பேசும்போது, சிவராமன் சார் தனது அனுபவக் கதைகளை சொன்னார். ‘’கல்லூரியில் யாரும் சரியாக இல்லை. ஹெச்ஓடி அதிகம் வேலை வாங்குகிறார். படிக்க நேரம் போதவில்லை. பிள்ளைகள் வளர்ந்திருந்தால் முன்னமே வேலையை விட்டிருப்பேன்’’ என புலம்பினார். இருப்பினும், உருப்படியாக செய்யும் ஒரே வேலை மாணவர் இதழில் கட்டுரை எழுதுவதுதான் என்றார். பிஹெச்டி பற்றி நான் கேட்டேன். ஹெச்ஓடி சரியில்லை. நானே உனக்கு சொல்லுறேன். வெயிட் பண்ணு என்றார். சரிங்க சார் என்றேன். வீட்டில் எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். சென்னையில் இருந்து பணிபுரிந்துகொள்ளவே இந்த ப

சமூக மாற்றம் ஏற்படுத்திய படங்கள் - கிங் ரிச்சர்ட், சக்தே இந்தியா, இறுதிச்சுற்று, ராட்சசி, தங்கல்

படம்
              சமூக மாற்றம் ஏற்படுத்திய திரைப்படங்கள் தாரே ஜமீன் பர் அமோல் குப்தா தனது ஓவிய ஆசிரியரை மனதில் வைத்து படத்தில் வரும் பாத்திரத்தை உருவாக்கியிருந்தார். படத்தில் டிஸ்லெக்சியா குறைபாடு கொண்ட சிறுவன் இருப்பான். அவனுக்கு ஓவியத்திறமை இருக்கும். அதை பள்ளியில் உள்ள கலை ஆசிரியர் ராம் சங்கர் நிகும்ப் கண்டறிந்து அவனை ஊக்கப்படுத்துவார். படம், அறிவுசார் குறைபாடு கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை காட்சிபடுத்தி குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது. ஹிச்கி இதில் ஆசிரியர் பாத்திரத்தை ராணி முகர்ஜி ஏற்றிருந்தார். குறும்பான மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வருவதுதான் படத்தின் மையக்கதை. இதில் பிரச்னை என்பது பள்ளியில் உள்ள குறும்பான மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியருகே டூரெட் சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் பேசுவதில் உடல் மொழியில் வினோத செய்கைகள் இருக்கும். இதோடு ராணிக்கு அவரது அப்பாவுடன் உறவு சீராக இருக்காது. இதையெல்லாம் படம் பேசி ரசிகர்களை கவர்ந்தது. சூப்பர் 30 கணித ஆசிரியர்  ஆனந்த் குமார் பற்றிய படம். நாயகன் பாத்திரத்தை ஹிரித்திக

ஊக்கப்படுத்துவதை எப்படி செய்வது? - சூப்பர் டெமோ - மயிலாப்பூர் டைம்ஸ் Extended

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  ஊக்கப்படுத்துங்க ப்ரோ? பொதுவாக சோகத்தில் மூழ்குவது ஒரு இன்பம். அதில் ருசி கண்டுவிட்டால் பிறகு வேறெதுவே தேவையில்லை என ஜெயமோகன் தன் மீட்சி நூலில் கூறியுள்ளார். இதுபோல ஆட்களிடம் சிக்கினால் என்னாகும் தெரியுமா? நேரம் வீணாவதோடு நம் உடலில் ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று திட்டமிட்ட ஆற்றலும் வெட்டியாக தீர்ந்துபோகும்.  செயலின்மை படைப்பு சார்ந்து செயல்படுபவர்களுக்கு வருவதுதான். ஆனால் அதிலேயே வெயில் கடுமைக்கு குளிர்ந்த நீரின் சேற்றில் எருமை புரள்வது போல அப்படியே நின்றால் எப்படி? திருவண்ணாமலைக்கு செல்லும்போது அப்படி ஒருவரை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. புகைப்படக்காரர் தினேஷ் சாந்தமூர்த்தி அப்படியொரு நிலையை உருவாக்கினார். நான் அங்கு வருவதாக போன் செய்தபோது அவருடைய வீட்டில் உறவினர்கள் இருந்தார்கள். சரி, என போனை வைக்க நினைத்தபோது சட்டென கோபப்பட்டவர், உடனே போனை வெக்காத, ஒருமணிநேரம் கழிச்சு கூப்பிடு என்றார்.  பிறகு போன் செய்தபோது, அவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். தினேஷ் அண்ணாவுக்கு முக்கியமான பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் உடனே மூக்கு விடைத்து