வாசிப்பது மனநிறைவைத் தருகிறது - காந்திராமன் கடிதங்கள்

 





ஊக்கம்




மின்னல் 23/10/2022


அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த இங்க் பென்னில் எழுத. புத்தக வாசிப்பு உங்களை நலமாக வாழ வைக்கும் என நம்புகிறேன். ஆத்ம தூய்மைக்காக நீங்கள் எழுதும் புத்தகங்களுக்கு எனது வாழ்த்துகள்.

முந்தைய நாள், சிவராமன் சாரிடம் பேசியதாக உங்களிடம் சொன்னேன். உங்களையும், அவரையும் தவிர என்னை யாரும் அதிகம் ஊக்கப்படுத்தியதில்லை. நான் மாணவர் இதழில் இத்தனை நாட்கள் வேலை செய்ய நீங்கள் இருவருமே காரணமாக இருப்பீர்கள் என உணர்கிறேன். அன்று பேசும்போது, சிவராமன் சார் தனது அனுபவக் கதைகளை சொன்னார். ‘’கல்லூரியில் யாரும் சரியாக இல்லை. ஹெச்ஓடி அதிகம் வேலை வாங்குகிறார். படிக்க நேரம் போதவில்லை. பிள்ளைகள் வளர்ந்திருந்தால் முன்னமே வேலையை விட்டிருப்பேன்’’ என புலம்பினார்.

இருப்பினும், உருப்படியாக செய்யும் ஒரே வேலை மாணவர் இதழில் கட்டுரை எழுதுவதுதான் என்றார். பிஹெச்டி பற்றி நான் கேட்டேன். ஹெச்ஓடி சரியில்லை. நானே உனக்கு சொல்லுறேன். வெயிட் பண்ணு என்றார். சரிங்க சார் என்றேன்.

வீட்டில் எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். சென்னையில் இருந்து பணிபுரிந்துகொள்ளவே இந்த பிளான் என தெரிகிறது. அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை என நினைக்கிறேன். பொருளாதாரம் இன்னும் சீரடையவில்லை. வட்டி கொடுக்கத்தான் சம்பளம் சரியாக உள்ளது.

 அண்ணன் வருமானமும் அந்தளவுக்கு வருவதில்லை. ஆறுமாசத்திற்கு ஒரு லட்சம் திரட்டுகிறோம். வீடும் பாதியில் நிற்கிறது. முழுவதும் கட்டி முடித்தால் திருமணம் என்ன்ற பேச்சுக்கு செவிசாய்க்கலாம் என நினைக்கிறேன்.

தினமும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போல பல எண்களின் பண்புகளை படிக்கிறேன். படிப்பது ஆங்கிலத்தில். இந்த செயல் மனநிறைவைத் தருகிறது. ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து வருகிறேன். பொழுதுபோக்காகவும் அறிவை வளர்க்கும் செயலாகவும் தெரிகிறது.

மாணவர் இதழில் நேற்று தீபாவளியை  வேட்டி அணிந்து கொண்டாடினோம். ‘ஒருநாள் கூத்து’ என்ற தலைப்பில் ஸ்டேட்டஸ் போட்டேன். இப்போதுதான் எழுத்தாளர்களுக்கு பணம் போட்டனர். பூர்விகா என்ற எழுத்தாளருக்கு மட்டும் பணம் சென்று சேரவில்லை. வருத்தப்பட்டாள் அப்ரண்டீஸ் பெண். அடுத்தமுறை கிடைக்கும் என ஆறுதல் சொல்லியிருக்கேன்.

நன்றி

காந்திராமன்

https://pixabay.com/photos/outlook-contemplate-think-discover-2208932/

கருத்துகள்