அள்ளிக் கொஞ்சேன் எனது காதலை....
பேசணும்போல இருக்கு என்று
உன் முதல் செய்தி வந்தது.
அழைப்பதற்குள் அடுத்த செய்தி
ஆனால் கூப்பிடாதே என்று.
இரண்டு செய்திகளுக்கும்
இடையிலான
உன் தயக்கம்
சற்றே தாமதமாக வந்தடைந்தது
என் விரல்களுக்கு
-முகுந்த் நாகராஜன்
கல்லூரிக்கு நீ
பிரயாணிக்கும்
அரசுப் பேருந்து
நீ ஏறியவுடன்
அரசிப் பேருந்தாகிறது
-சண்பகீ.ஆனந்த்
எனது காதலை
ஒரு குழந்தையாகவோ, பொம்மையாகவோ
மாற்றத் தெரிந்திருந்தால்
எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும்
பார்த்ததும் அள்ளிக் கொஞ்சுவாய்
எனது ஆன்மாவை
முட்டை கேக்காகவோ, சாக்லெட்டாகவோ
மாற்றத் தெரிந்திருந்தால்
எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும்
உனக்குப் பிடித்திருந்தால் சாப்பிடுவாய்
இல்லையெனில்
குப்பைத்தொட்டியில் எறிந்துவிடலாம்.
-ஜானகிராமன்
படம் - பிக்ஸாபே
கருத்துகள்
கருத்துரையிடுக