நுரைத்து ததும்பும் மதுக்குவளையின் ஐஸ்கட்டி நீ!

 










உன் விழிகளில் தேங்கிக் கிடக்கும்

ப்ரியங்களின் மகரந்தம் இப்போதெல்லாம்

தீண்டுவதே இல்லை என்னை…

என்னை ஆற்றுப்படுத்தும் உன் வாஞ்சை

மிக்க மொழிகள் மெல்ல மௌனத்தின்

வெளியில் உலவிக் கொண்டு இருக்கின்றது.

அன்பின் தாவரங்கள் மலர்ச்சியில்

பெருகத் தொடங்கியிருந்தது. உன்

கருணையினால்…

நீ இன்றி அழுகிப் போகத் தொடங்கிவிட்டது

செடிகளிலேயே மலர்கள்

அழுகிய வாசனை மெல்ல மேலெழும்புகிறது

5.4

முன்னெப்போதோ நான் செய்த

பாவத்திற்கு கிடைத்த தண்டனையாய்

கருதிக்கொள்ளத்தான் வேண்டும்…

ஒரு தேவதையைப் போல என்னோடு நீ

வந்து இருந்து, நடந்து

அற்புதம் புரிந்ததை இனி

எப்போதும் நான் மறக்கவியலாது.

ஆனால், நான்தான் சாத்தான்

நான் உன்னை நுரைத்து ததும்பும்

என் மதுக்குவளையின் ஐஸ்கட்டியாய்

இட்டு வைத்தேன்.

மிக உயர்வானவைகள் எளிமையாகத்தான்

இருக்குமென்பது எனக்கு புரியவில்லை

இவ்வளவு நடந்தும்…

கசப்புகள் மறந்து நான் உனக்காக

காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்

நீ மறுபடியும் என்னை மலர்த்துவாய்

என்று…

நினைவுகள் மீளவும் வழியற்ற

பாதையில் நிறைந்து கிடக்கின்றன

ப்ரியங்கள்….

 

தொகுப்பு

அன்பரசு சண்முகம்

கவிதை 

குமார் சண்முகம்

 


கருத்துகள்