உரையாடல்களில் வல்லவரான தேவன் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

 







24.1.2022

அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.

உடல்நலமும் மனநலமும் மேம்பட்டிருக்க பேரிறையை வேண்டுகிறேன். பத்து நாட்களுக்கு முன்னர் ஆர்டர் செய்த வினோத் மேத்தா பற்றிய நூல் இன்றுதான் கைக்கு வந்தது. டிஹெச்எல் ப்ளூடர்ட் ஆட்கள் கூரியரில் கிடைத்தது. அவுட்லுக் பத்திரிகை நிறுவனர், ஆசிரியரின் சுயசரிதை நூல். இனிமேல்தான் படிக்கவேண்டும்.

அரசின் மின்நூலகத்தில் மறைமலையடிகள் கடித நூலை தரவிறக்கிப் படித்தேன். தமிழ் சொற்களின் பயன்பாடு நன்றாக உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் ஆண்டு அடிப்படையில் தொகுக்கப்படவில்லை. கடிதத்ததில் உரிய பெயர்களும் கூட இல்லை.

மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாம் பாகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். மனிதரின் குணத்தை உடனே வெளிப்படுத்தும் தெரிந்துகொள்ளும் வகையிலான உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் வல்லவராக இருக்கிறார். உறவினர்களால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழந்த வேதாந்தம் எப்படி சென்னைக்கு வந்து பத்திரிகையாளராகி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறார் என்பதே கதை. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி

அன்பரசு

படம் - ஞானசம்பந்தன் வலைத்தளம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு