உடலில் இருந்து நச்சுகளை நீக்க என்ன செய்வது? - டீ டாக்ஸ் உணவுகள்

 

 






டீ டாக்ஸ் உணவுகள்

உடலை, மனதை சுத்தம் செய்துகொள்ளுங்கள் என நிறைய உணவுகள் கூறிக்கொண்டு சந்தையில் விற்று வருகின்றன. உண்மையில் அவை நமக்கு நன்மை செய்கின்றனவா என்று கேட்டால் முழுமையாக ஆம் என்றும் இல்லை என்றும் கூற முடியாது. கல்லீரலை சுத்திகரிக்கும் சில உணவுப்பொருட்கள் உள்ளன. அவற்றைத்தான் டீடாக்ஸ் எனக் கூறி தனி உணவுமுறையாகவே வடிமைக்கிறார்கள்.

வெளிப்படையாகச் சொன்னால், டீ டாக்ஸ் என்பது உடலிலுள்ள நச்சுகளை நீக்கும் இயல்பான முறை. உடலில் வியர்வை சுரப்பது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது ஆகியவையும் நச்சு நீக்க செயல்கள்தான். விஷயம் என்னவென்றால், கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிகளவு நீரைக் குடித்து முடிந்தால், உண்ணாவிரதம் இருப்பது சிறந்த டீ டாக்ஸ் செயல் எனலாம்.

உண்ணாவிரதம் இருக்கும்போது வெந்நீர் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும். இதை ஒருவர் ஒருவேளை இருவேளை என தொடங்கி சில நாட்களுக்கு கடைபிடிக்கலாம். இந்த காலத்தில் உடலில் இருந்து மலம், சிறுநீர் வழியாக நச்சுகள் முழுமையாக வெளியேறும். இதன் விளைவாக உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்திய நச்சுகள் மெல்ல களையப்படும்.

 மாவுச்சத்து உணவு, வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து தாவர உணவுகள், பழங்களின் சாறு ஆகியவற்றை உணவாக உண்டாலே உடல் சோர்வு நீங்கி துலக்கமாகும். கல்லீரலுக்கு சிக்கல் ஏற்படுத்தாத உணவுகளை உண்ணுவதே டீடாக்ஸின் முக்கியமான அம்சம். கொழுப்பு, மாவுச்சத்து, ஆல்கஹால் ஆகியவற்றை கல்லீரல் சுத்திகரித்து ஏற்பது அதன் திறன் குறையும்போது சிக்கலான செயலாகிறது. இதன் விளைவாக உடலில் நோய் உருவாகிறது. முக்கியமாக உடல் எடை கூடுகிறது. இதன் விளைவாகதான் நோய்கள் ஒன்றாக கூடி வந்து நம் வரவேற்பறையில் உட்காருகின்றன.

டைம் வார இதழ்

https://pixabay.com/photos/lemon-cocktail-drink-juice-glass-4931418/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்