மதவாதம் சார்ந்து உருவாகும் அரசதிகாரம் அச்சமூட்டும் ஒன்று! - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்

 





ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர்






இந்துத்துவா அரசியலை விமர்சனம் செய்பவர்களில் முக்கியமானவர், வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர். இந்தியாவின் பன்மைத்துவ தன்மைக்காக குரல் கொடுத்து இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, ‘தி ஃப்யூச்சர் இன் தி பாஸ்ட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளராக அவரை மாற்றிய விவகாரங்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றிய தனது கருத்துகளை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன நூலாக வெளிவந்திருக்கிறது.

வரலாற்றை இந்துத்துவா எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்?

வரலாற்றை அணுகுவது என்பது பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுப்பதுதான். ஆதாரங்களை சேகரித்து, அதை ஆய்வு செய்து, கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான விளக்கங்களை கொடுப்பது என புரிந்துகொள்ளலாம்.

இந்துத்துவா கருத்தியலுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சிறு குறிப்பை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு கருத்தியலை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். ஆதாரங்கள் நம்பகத் தன்மை கொண்டவையா, வாதங்கள் ஏற்புடையவையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பொதுவாக, வரலாற்று ஆய்வாளர்கள், இந்துத்துவாவின் வரலாற்று பார்வையை முக்கியத்துவப்படுத்தி பார்ப்பதில்லை.

இந்துத்துவா வரலாறு என்பது கடந்த கால இந்தியாவில் உள்ள இந்து ராஷ்டிரத்தை அடிப்படையாக கொண்டது. இதன் அடிப்படையிலேயே பிறரை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அண்மையில் வரலாற்று பாடநூல்களில் முகலாய வரலாறு நீக்கப்பட்டது இதற்கு ஒரு சான்று. வரலாறு என்பது பல்வேறு ஆதாரங்களின் பங்களிப்பைப் பெற்று உருவாகிறது. இந்துத்துவா கொள்கைகளைப் பொறுத்தவரை அது, இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது. எனவே, அது, இந்து சமூகத்தின் நடவடிக்கைகளை மட்டுமே கவனத்தில் கொள்கிறது.

நவீன அறிவியலை இந்துகள் முன்னமே அறிந்திருந்து என கூறும் கருத்து, இப்படிபட்ட மனநிலையிலிருந்தே உருவாகிறது. ஸ்டெம் செல்களிலிருந்து கௌரவர்கள் உருவானது, தொன்மையான பறக்கும் விமானங்கள், கடவுள் கணேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டது என கூறப்படும் விஷயங்களுக்கு நிரூபண ஆதாரங்கள் கிடையாது. முறையான வரலாற்று ஆய்வாளர்களுக்கும், வரலாற்றை  புதிதாக எழுதி உருவாக்குபவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

கல்விப்புலத்திலும், அரசியலிலும் கூட ஆரியர்கள், தனித்துவமான பழங்குடிகள் என விவகாரங்கள் சிக்கலாகி தனித்தனி பிரிவாக பிரிந்து பேசி வருகிறார்களே?

இந்தியா காலனி நாடாக மாறுவதற்கு முன்னர் வாழ்ந்த மக்கள் ஆர்யர்கள், அவர்கள் பேசிய மொழி ஆரிய மொழி , அவர்கள் அந்த சமயத்தில் உயர்ந்த மரியாதையை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொன்மையான ஈரான் நாட்டில் ஈரானிய ஆரியர்கள் தங்களது ஆரிய  இன, மொழி அடையாளம் பற்றி பெருமை கொண்டிருந்தனர்.  ரிக்வேதத்துடன் கலாசார ரீதியாக தொடர்பு கொண்டிருந்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இனம் என்பது முக்கியத்துவம் பெற்று உலகம் முழுக்க செல்வாக்கு பெற்றது. இன அறிவியல் என்பது மக்களை பல்வேறு இனங்களாக பிரித்தது. இதன்படி, செல்வாக்கான இனக்குழுக்கள் உருவாயின. இதில் ஆரியர்கள் செல்வாக்கான இடத்தில் இருந்தனர்.  ஆரியர்கள் பற்றிய கருத்தை ஜெர்மனி அதிபராக இருந்த ஹிட்லர், பாசிச கட்சியின் முசோலினி புதிய உயரத்திற்கு கொண்டு சென்றனர்.

 இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பி எஸ் மூஞ்சே, ஆர்எஸ்எஸ் அமைப்பை வடிவமைக்க முன்மாதிரியாக நாஜிக்களை கருதினார். அதன் கருத்துகளைப் பயன்படுத்திக்கொண்டார்.  காலனி காலத்திலும் ஆரியர்கள் சமூக அளவில் உயரமான இடத்தில் இருந்தனர். இந்திய ஆரிய கலாசார அடிப்படையில் சமஸ்கிருதம் என்ற மொழி முன்னிலைப்படுத்தப்பட்டது. இதன் வழியாக இந்துயிசத்திற்கு வேத பிராமணியம் அடிப்படையானது.

இந்தியா ஒரு காலகட்டத்தில் இந்துமத முன்னோர்களால் பித்ருபூமி, புண்ணிய பூமி என்று அழைக்கப்பட்டதாக சாவர்க்கர் கூறினார். மத்திய ஆசியா வழியாக ஆரியர்கள் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வந்ததை இந்துத்துவா மறுக்கிறது.

காலனியத்திற்கு எதிரானது,  இந்திய தேசிய கலாசாரம் . இதன் அடிப்படையில் இந்து ராஷ்டிரம் என்பது இன்றைக்கு எப்படி உள்ளது?

வரலாற்று ரீதியாக தேசியவாதம் என்பது இரண்டு வகையாக உள்ளது. இந்திய தேசிய இயக்கம் உருவாக்கிய தேசியவாதம். இதில், அனைத்து வகை இந்தியர்களும் இனக்குழுவைச் சேர்ந்த மக்களும் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பிறகு உருவான தேசியவாதத்தில் மதம், மொழி, வகுப்பு, சாதி ஆகிய அடையாளங்களைக் கடந்த தன்மை இருந்தது. இந்த தேசியவாதத்திற்கு இருந்த ஒரே லட்சியம் காலனிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து இந்தியாவை சுதந்திர நாடாக மாற்றுவதுதான்.

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, அனைத்து குடிமக்களுக்கும் சமநிலையை உறுதி செய்வது ஆகிய கருத்துகள் தேசியவாத லட்சியத்தில் இருந்தது.

1920 மற்றும் 1930களில் மதம் சார்ந்த தேசியவாதம் உருவானது. இதை பெரும்பாலான இனக்குழுவினர் அங்கீகரித்தனர். ஒற்றை மதம் சார்ந்த அதை அடிப்படையாக கொண்ட தேசியவாதம் பெரும்பான்மை இனக்குழுவினரின் நலன்களுக்கானது.  மக்கள்தொகை அடிப்படையில் இந்து மதம் பெரும்பான்மை கொண்டது.

மதம் அடிப்படையில்  முஸ்லீம்கள் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த  இரு மதங்களுமே காலனிய ஆட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களல்ல. காலனிய ஆட்சி முடிந்தபிறகு மத அடிப்படையில் தனி நாடுகளை அமைக்க முயன்றனர். இப்படித்தான் முஸ்லீம்களை கொண்ட நாடாக பாகிஸ்தானும் இந்துகளை கொண்டதாக இந்தியாவும் மாறியது.

இந்த செயல்பாடு எப்படி உருவானது?

காலனிய கால ஆய்வாளர்கள், நவீன இந்தியாவிற்கு முந்தைய காலத்தில் இந்தியர்களுக்கென தனி வரலாறு இல்லை. பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன்பு வரையிலும் அதே நிலை என கூறினர். பிறகு செய்த ஆய்வுப்படி, இரு மதம் சார்ந்த  நாடுகளை கோட்பாடாக உருவாக்கினர். இதன்படி இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் என இரு கருத்தியல் கோட்பாடுகள் உருவாகின. முஸ்லீம் லீக் அமைப்பு, முஸ்லீம் தேசியவாதத்தையும், இந்து மகாசபை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து,  இந்து ராஷ்டிரத்தையும் ஆதரித்தது.

குறிப்பிட்ட நிலப்பரப்பில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் மதம் சார்ந்த தேசியவாதம் உருவாகிறது. பிற தேசியவாதங்களிலிருந்து மதம்சார்ந்த தேசியவாதம் வேறுபட்டது. இந்த மத தேசியவாதம், பிற அடிப்படை மதவாதிகளோடு இணைந்தது. இதில் ஜனநாயகம், மதசார்பின்மை என்பது இருக்காது என்பதால், மதவாதம் சார்ந்து உருவாகும் நாட்டின் அரசதிகாரம் அச்சமூட்டுவதாகவே உள்ளது.

 

 

 

Ziya us salam

“For hindutva only the hindu past is relevant”

Romila thapar

The hindu

 


கருத்துகள்