சாதியால் இழிவுபடுத்தப்பட்ட எழுத்தாளரின் வாழ்க்கைக் குரல் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

 






எழுத்தாளர் தேவிபாரதி



21.1.2022

 

அன்பிற்கினிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

நேற்று குக்கூ வெளியிட்ட தேவிபாரதியின் ஒரு மணி நேர நேர்காணலை யூட்யூபில் பார்த்தேன். நிறைய இடங்களில் பேசும்போது எழுத்தாளரின் குரல் தடுமாறி உடைந்துவிட்டது. கேமரா சிறப்பாக இயக்கப்பட்டது. ஆனால், படத்தொகுப்பாளர் எழுத்தாளர் தனது சொந்த வாழ்க்கையை சொல்லி அழும் காட்சியில் வண்ணமாக இருந்த காட்சியை கருப்பு வெள்ளையாக மாற்றுகிறார். இப்படி செய்வது எதற்கு என்று புரியவில்லை. எழுத்தாளர்கள் அவர்களாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுவதில் நிறைய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள முடியாது போல உள்ளது.  இதற்கு அவர்களின் அகவயமான இயல்புதான் காரணம். ஒரு மணிநேர பேட்டியில், தேவிபாரதி எழுதிய நூல்களைப் பற்றிய கேள்விகளே இல்லை.

ஜீவா நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஜெயமோகன் பேசிய உரை சிறப்பாக நன்றாக இருந்தது. சிறந்த கச்சிதமான உரை. நன்றாக தயாரித்து வந்து சிறப்பாக பேசினார். களப்பணி எப்படிப்பட்டது., அதற்கான உழைப்பு, அதில் கிடைக்கும் பயன், அதற்கான காலக்கெடு என சில விஷயங்களை அழுத்தம் திருத்தமாக பேசினார்.

தன் மீட்சி – ஜெயமோகன் எழுதிய நூலில் நாற்பது பக்கங்களைக் கடந்துள்ளேன். 135 பக்கங்கள் கொண்ட நூல் இது. அவுட்லுக் பத்திரிகை நிறுவனர், வினோத் மேத்தா பற்றிய நூலை அமேஸானில் ஆர்டர் செய்துள்ளேன். வந்ததும் வாங்கிப் படிக்கவேண்டும். பிடிஎஃப் இதழாக ஐந்து பக்கங்கள் பட்டம் வரவிருப்பதாக பொறுப்பாசிரியர் தகவல் சொன்னார். நாளை முதல் அதற்கான பணி தொடங்குகிறது. உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள். பெற்றோரைக் கேட்டதாக சொல்லவும்.

அன்பரசு

 https://devibharathi.blogspot.com/

https://www.youtube.com/watch?v=J-dFLkvM6fo

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்