கிரிக்கெட்டை விளையாடமுடியாத அளவுக்கு வெயில்!
சார் வணக்கம். நலமா? கடும் வெயில். உடல் சூடு அதிகம்.
பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டை விளையாட முடியவில்லை. மழையில் ஒதுங்கினால் தேவலை
என்பது போல வெயில் வாட்டுகிறது.
நேற்று (ஞாயிறு) குடும்பமாக அக்கா வீட்டிற்குச் சென்றோம்.
அங்கேயே நாளைக் கழித்தோம். எங்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை. வீட்டில் கடும் புழுக்கம்.
என்னுடைய முதல் அக்கா வீடு காற்றோட்டமாக நன்றாக இருக்கும். தாய்மாமனுக்கே அக்காவைக்
கொடுத்ததால் அவர்கள் வீட்டில் எங்களுக்கு உரிமை அதிகம். பனங்காய், தோண்டி கிடையில்
அறுத்து சாப்பிட்டோம். குடும்பம் சூழ இருந்ததால் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி.
மாணவர் இதழ் பற்றி சொல்ல ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.
டிசைனர் சீஃப் போனதில் இருந்து, அவரது குழுவினர் சிறப்பாக டிசைன் செய்கிறார்கள். புதுப்புது
லோகோ வைத்து எனது பக்கத்தை மெருகேற்றுகிறார்கள். விரைவான லே அவுட் இனி நடக்கும் என
நம்புகிறேன்.
கணபதி சார், இப்போதெல்லாம் என்னிடம் நிறைய பேசுகிறார்.
கொடுக்கு அந்தளவிற்கு கொட்டுவதில்லை. அவரது பெண்ணை நல்ல கல்லூரியில் சேர்க்க படாதபாடு
படுகிறார். மாணவர் இதழ் எடிட்டரும் தாய் நாளிதழும் உதவி புரியவில்லை என்ற புலம்பல்
அதிகம்.
உங்கள் ஊர்க்காரர் ஓவியர் பி, என்னிடம் நிறைய பேசுகிறார்.
ஈரோட்டில் நிலவும் வெப்பம், பஞ்சம் பற்றிய தகவல்கள் அதிகம். நண்பர் ஜெகன் திருமண வாழ்க்கையை
எதிர்கொள்ளவிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான பிளஸ் 1, பிளஸ் 2 ரிசல்ட் போலியாக
இருக்கின்றன. அரசு வெளியிடும் கணக்குகள் சரியாக இல்லை என பேப்பர் கரெக்ஷன் செய்த எனது
சகோதரர் சொல்கிறார். திமுக அரசு தற்போது இதுதொடர்பாக கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக எந்த படத்தையும் முழுமையாகப் பார்க்க
முடிவதில்லை. ஆர்வம் குறைவு. ஆனாலும் நண்பர் குமாரிடம் பொன்னியின் செல்வன் 1, 2,
1998 ஆகிய படங்களைக் கேட்டிருக்கிறேன். தருவார்.
வெயில் கடுமையாக உள்ளது. தோல் நோய் இருப்பவர்களுக்கு
அதிக சிரமம் இருக்கும். என் தங்கைக்கு மீண்டும் தொடங்குகிறது, அரிப்பு பிரச்னை. நீங்களும்
கவனமாக இருங்கள்.
நன்றி
காந்திராமன்.
கருத்துகள்
கருத்துரையிடுக