ஒடிஷா இளைஞர்களை முன்னுக்கு கொண்டு வந்த மனிதர்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

 




சுப்ரதோ பக்சி - கோ கிஸ் தி வேர்ல்ட் நூல்





16.1.2022

 

அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தத்திற்கு, வணக்கம். நலமாக உள்ளீர்களா? வீட்டில் உள்ளோரின் நலனைக் கேட்டதாக சொல்லுங்கள். இம்முறை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறை அமலாகி இருக்கிறது. எனவே, அனைத்து நாட்களும் ஆபீஸ் செல்வதில் விருப்பம் இல்லை. சில நாட்களில் வேலையை முடித்துவிட்டு உடனே எங்காவது பயணம் செய்வது என நினைத்துள்ளேன். பார்ப்போம்.

‘தெருக்களே பள்ளிக்கூடம் என்ற மொழிபெயர்ப்பு நூலை ஆலிவர் அண்ணாவிடம் இரவல் வாங்கி வந்தேன். அதையும் இனி வாசிக்க வேண்டும். பஸ்சில் திருவண்ணாமலையிலிருந்து சென்னை வரும்போதே, அந்நூலில் 44 பக்கங்களைப் படித்துவிட்டேன்.

இந்த நூலின் தொடக்க தமிழ்மொழிபெயர்ப்பை நான்தான் செய்தேன். அந்த நூல் இலவச நூலாக ஃப்ரீதமிழ் இபுக்ஸில் உள்ளது. நூலின் மொழிபெயர்ப்புத் தரம் சரியானபடி கைகூடி வரவில்லை.

புஷ்பா – தெலுங்குப்படம் பார்த்தேன். கொண்டாட்டமாக உள்ளது. தெலுங்கிலேயே பார்த்தேன். நன்றாக எடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் படத்திற்கு நல்ல வருமானம் உள்ளது. தென்னிந்தியாவில் இப்போது ஓடிடியில் கூட வந்துவிட்டது.

ஒடிஷாவில் பணியாற்றிய திறன் மேம்பாட்டு செயல்பாட்டாளர் சுப்ரதோ பாக்‌ஷி என்பவரின் நூலை அமேஸானில் ஆர்டர் செய்து வாங்கினேன். இனிதான் படிக்கவேண்டும். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

நன்றி!

 


கருத்துகள்